Galaxy Books

புத்தகப் பார்வை : ஆனையூர் கொக்குளம் நாடு_ஆறுகரை

அழகுராஜா 2020 ஆம் வருடம் உசிலம்பட்டியில் பெருங்காமநல்லூர் வீரமங்கை மாயக்காள் நலச்சங்கம் நடத்திய‘பெருங்காமநல்லூர் நூற்றாண்டு நினைவுகள் 1920 – 2020’ புத்தகத்தின் வெளியீட்டு விழாவில்தான் எனக்கு இந்த புத்தகத்தின் ஆசிரியர் திரு.ஜாக்சன் அவர்கள் அறிமுகமானார். செக்கானூரணியைச் சுற்றி உள்ள கோவில்கள், பழங்கால கட்டிடங்கள், பழமையான மரங்கள், நடுகற்கள் பற்றிய வரலாற்றை ஜாக்சனிடம் இருந்து நான் தெரிந்து கொண்ட போது எனக்கு வியப்பா இருந்தது. நான் சில வரலாற்று நிகழ்வுகளைக் கேட்ட பொழுது கொஞ்ச நாள் பொறுங்கள் என்று […]

புத்தகப் பார்வை : கரிஷ்மா சுதாகரின் ‘எங்க கருப்பசாமி’

பரிவை சே.குமார் எங்க கருப்பசாமி – எழுத்தாளர் கதிரவன் ரத்னவேலு அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளதைப் போல நமது தேசத்தில் அனைத்தும் கதைகளாலேயே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. கிராமங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கும், அந்தக் கதைகள் ஒவ்வொருவராலும் ஒவ்வொருவிதமாகச் சொல்லப்படும். அதில் எத்தனை சதவிகிதம் உண்மை இருக்கும் என்றெல்லாம் தெரியாது என்றாலும் வழிவழியாக அதன் மீதான நம்பிக்கை மட்டும் ஒரு துளி கூட குறையாமல் இருக்கும். அதேபோல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பெண் தெய்வம் – வீட்டுச்சாமி, குறிப்பாக கன்னித் […]

கட்டுரை : மனஅழுத்தம் ( ஸ்ட்ரஸ் )

கமலா முரளி முன்பெல்லாம் , ஸ்ட்ரஸ்  அல்லது மன அழுத்தம் , குடும்ப  கஷ்டங்கள் மிக அதிகமாகி, பாரத்தை சுமக்க அவதிப்பட்டவர்களுக்கு வந்து கொண்டு இருந்தது. பிறகு, மாணவர்கள் அதிலும் குறிப்பாக பன்னிரெண்டாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் , மிகுந்த மன அழுத்தத்தால் அவதிப்படுவது எல்லோராலும் உணரப்பட்டது. அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் ஆலோசனைகள் கல்வியாளர்களாலும் ஊடகங்களாலும்  பரிந்துரைக்கப்படுகின்றன. தற்போதோ , சிறார்கள் கூட மன அழுத்தத்தில் இருந்து தப்பவில்லை. ஏன் மன அழுத்தம் வருகிறது? அதிக எதிர்பார்ப்புகள், கிடைத்த வசதி வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ளாதிருத்தல், பொறுமை இன்மை போன்ற எதிர்மறை  காரணிகள் மன அழுத்தம் உருவாக காரணமாக இருக்கின்றன. […]

சிறுகதை : யானையாய் அவர் இருந்தார்

 சுஶ்ரீ போடிநாயக்கனூர், சேரடிபாறை மேல சொக்கநாதன் கோவில் பக்கம் புருஷோத்தமனின் பழைய கால வீடு அது, பெரிய கூடம்… நடுவுல ஊஞ்சல்… இதுதான் அந்த வீட்டின் சேதப் படாத பகுதி. காலை நேரம் ,அந்த கூடத்தில் யானையாய் தவழ்ந்து 3 வயது பேரன் முகுந்தை முதுகில் சுமந்து சுற்றி வந்தார் புருஷோத்தமன். “ ஏய் ஆனை வேகமா போ அச்சிடுவேன்”னு தாத்தாவை தவழ வைத்தான் முகுந்த். வாசலில நிழலாடியது போஸ்ட் மாஸ்டர் புஜங்க ராவ்தான்,நெடுங்கால நண்பர். “ […]

சிறுகதை : புரியாத புதிர்

கீதா ரெங்கன் சக்திக்கு அன்றைய காலை இயல்பாய் விடியவில்லை. ஏதோ ஒன்று மனதைச் சூழ்ந்து அழுத்தியது. “துரை குடும்பம் எல்லாம் வடக்க கைலாய யாத்திரை, அரித்துவாரு, ரிசிகேஷுன்னு போனாங்கல்ல? கங்கை தீர்த்தம் கொடுத்துட்டுப் போலாம்னு வந்திருந்தாங்க. மாப்பிள்ளைய அங்க பாத்தாங்களாம். இங்க வாராராம் இத்தனை வருஷம் காணாம அங்க கண்டதும் ஆச்சரியமாயி விவரம் சொல்லிட்டுப் போனாங்க. துரையும், சம்சாரமும்” அம்மாவின் குரல் செய்தி வாசித்தது போல் இருந்தது. திருத்த வேண்டிய தேர்வு பேப்பர் எல்லாம் அவளைப் பார்த்து […]

முகநூல் முக்காபலாக்கள்

கமலா முரளி முகநூல் தனது முகப்பொலிவை சற்றே இழந்து, ஊடக அழகிப் போட்டிகளில் தன் இடத்தை கீச்சும் ஒற்றெழுத்து தளத்துக்கும், இன்ஸ்டாகிராக்கும் இன்னும் காணொளி/லி களுக்கும் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டதோ என்ற ஐயம் உள்ளது.  முதல் காதலை மறக்காத எண்ணற்ற  40+கள் தயவில் டாப்டென் வரிசையில் எப்படியோ தத்தளிக்கும் முகநூலில் தான் எத்தனை பஞ்சாயத்துகள், முக்காபலாக்கள் ! தாங்கள் விரும்பும் அல்லது சார்ந்திருக்கும் கருத்தியலுக்குச் சாதகமாக ஒருவர் பதிவிட, அந்த பதிவுக்கு ‘விருப்பம்’ இட, கமெண்ட் போட […]

சிறுகதை : ஜீவநதி

பரிவை சே.குமார் ‘தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு… பிள்ளைகளுக்கு புதுத்துணி எடுக்கணும், மளிகைச் சாமான் வாங்கணும். கையில் சுத்தமாக் காசில்லாமல் என்ன பண்றது’ன்னு குழப்பத்தோடு அமர்ந்திருந்தாள் காவேரி. பணம் போட்டு விடுறேன்னு சொன்ன அவளோட புருசன் மலையப்பனும் இதுவரைக்கும் பணம் அனுப்பலை. நேத்துக்கூட போன்ல அவன் கூட சண்டை போட்டாள். ‘என்ன பண்ணச் சொல்றே… பணந்தர்றேன்னு சொன்ன மொதலாளி ஊருக்குப் போகும்போது வாங்கிக்கன்னு சொல்லிட்டாரு… ரெண்டு மூணு நாளக்கி முன்னாலயே வந்திருவேன்…. வந்ததும் எல்லாம் வாங்கலாம்’ […]

புத்தகப் பார்வை : பி.கே.மூக்கையாத்தேவர்

அழகு ராஜா நம்ம நாட்டில் காலம் காலமா இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் பாேராடி உயிர் நீத்தவர்களையும், மக்களின் உரிமைகளை பெற்று தர தன்னுடைய இளமையை இழந்து வறுமையில் வாழ்ந்து உயிர் நீத்தவர்களையும், சிலரின் சுயநலத்திற்காக அவர்களை சாதி வட்டத்தில் அடைத்து அவர்களின் தியாகங்களும், வாழ்க்கை வரலாறுகளும் மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருவது எல்லாரும் அறிந்ததே. இந்த நவீன காலத்திலும் ஒருவர் ஏதாவது ஒரு துறையில் சாதித்தால் முதலில் அவரின் சாதனையைப் பாராட்டாமல் அவரின் சாதியைப் பார்த்து அவரின் சாதனையைப் […]

சிறுகதை: அன்பின் ஆழம்

கமலா முரளி ஷேலான் சொல்யூஷன்ஸ் நிர்வாகத் தலைமையகம் . பரபரப்பான ரோடக் ரோடு பகுதியை அடுத்த ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் எட்டாம் தளத்தில் இருந்தது. ரோடக் ரோடு தொழிற்பேட்டைப் பகுதியில் அதன் ஒரு உற்பத்திப் பிரிவு. கிளையின் மூத்த நிர்வாகி சுந்தரமூர்த்தி. இன்று தன் அலுவலகத்துக்குப் போகாமல், ஹெட் ஆஃபிஸில் வந்து நின்றது அவரது சிவப்பு நிற ஹோண்டா கார். நொய்டா கிளை நிர்வாகி செந்தில்நாதனும்  சுந்தரமூர்த்திக்கு முன்னதாகவே ஆஜராகிவிட்டார். இரு சக்கர உதிரி பாகங்கள் […]

சிறுகதை : எனக்கு மட்டும் ஏன் இப்படி

சுஶ்ரீ    (சுஸ்ரீ என்ற புனைப்பெயரில் எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் சுப்பிரமணியன் அவர்கள் நிறையச் சிறுகதைகள் எழுதி வருகிறார்)                  ‘எல்லாரும் குளிச்சாச்சு, நீங்கதான் லாஸ்ட் போங்க டவல், ஷாம்பு, சோப் ரெடியா வச்சிருக்கேன்’ – ஷீலா கிச்சன்ல இருந்து கத்தினாள்.  ஷீலா என் பொண்ணு என் மேல உயிர். இன்னிக்கு எல்லாருமா ஒரு கல்யாணத்துக்கு போற பிளான். பேப்பர் படிச்சுட்டே இருந்தேனா என்னவோ சோம்பல். மெதுவா எழுந்து […]

Shopping cart close