ஆர்.வி சரவணன் ‘இளமை எழுதும் கவிதை நீ….’ , ‘திருமண ஒத்திகை’ என்ற எனது இரு நாவல்களை தொடர்ந்து மூன்றாவதாக வெளியாகிறது ‘பூவ போல பெண்ணொருத்தி’. பத்து வருடங்களுக்கு முன் எனது ‘இளமை எழுதும் கவிதை நீ….’ நாவலின் அணிந்துரைக்காக எழுத்தாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை நான் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், ‘எல்லாரும் சிறுகதைகள் எழுதிட்டு அப்புறமாதான் நாவலுக்கு வருவாங்க. நீங்க என்ன எடுத்த உடனே நாவலை எழுதியிருக்கீங்க’ என்று கேட்டார். ‘சினிமாவுக்கான கதைகளாகவே கற்பனை பண்ணி எழுதுவதால் சிறுகதைகள் எழுத எண்ணம் இருந்தில்லை’ என்றேன். என் நாவலுக்கு அவர் கொடுத்திருந்த அணிந்துரையில், ‘நான்கைந்து பக்கம் வருவது போல் சிறுகதைகள் எழுதி பழகுங்கள். இது உங்கள் எழுத்துக்கள் மேம்பட உதவும்’ என்று குறிப்பிட்டிருந்தார். அவர் சொன்னதை விடாப்பிடியாக பிடித்து கொண்டு சிறுகதைகள் எழுத முயற்சித்ததன் பலன், கடந்த […]