Galaxy Books

புத்தகப் பார்வை : கரந்தை மாமனிதர்கள்

நூலாசிரியர் : கரந்தை ஜெயக்குமார் (ஆசிரியர் – பணி நிறைவு) பரிவை சே.குமார். கரந்தை மாமனிதர்கள்- கரந்தை ஜெயக்குமார் ஐயா எழுதிய ஐந்து கட்டுரைகள் அடங்கிய சிறிய நூல். இந்த கட்டுரைகளில் சொல்லப்பட்டிருக்கும் ஐவரும் தமிழுக்காக வாழ்ந்தவர்கள். எத்தனை சிறப்பான மனிதர்களை இத்தனை சிறிய புத்தகத்தில் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைக்கும் போதே பிரமிப்பாக இருக்கிறது. கரந்தையில் பிறந்து அங்கு தமிழ்ச்சங்கம் வளர்த்து வானளாவிய புகழை அடைய வைத்த பிரமாக்கள் குறித்த தேடலில் நமக்கு அரிய செய்திகளை […]

புத்தகப் பார்வை :கதையல்ல வாழ்வு

பரிவை சே.குமார் ——————————————————————————————————————–கேலக்ஸி இணையதளம் வழி வாங்க : கதையல்ல வாழ்வு——————————————————————————————————————– கதையல்ல வாழ்வு இது எளிய மனிதர்களின் வாழ்க்கைக் கதை அல்ல வாழ்க்கை, வாக்கு மூலம். ஒரு கதையோ கட்டுரையோ எழுதும் போது நாம் மனதில் தோன்றுவதை எழுத்தில் கொண்டு வந்துவிட முடியும் ஆனால் இதிலிருக்கும் கட்டுரைகள் அப்படியானவை அல்ல. ஒவ்வொரு கட்டுரைக்கும் சமூகத்தின் எளிய மனிதர்களின் வாழ்க்கையை பேசியிருப்பதால் அவர்களுடன் பேசி, அதை அப்படியே எழுத்தில் கொண்டு வந்திருப்பது என்பது சாதாரண விசயமில்லை. அதில் […]

புத்தகப் பார்வை : கழிப்பறைக்குச் சென்றிருக்கிறார் கடவுள்

அழகுராஜா சில மாதங்ளுக்கு முன் மெரினா இணைய வழி புத்தக விற்பனையகத்தின் இணையதளத்தில் சில புத்தகங்களைத் தேடிக் கொண்டு இருக்கிறப்ப கண்ணுல பட்டது இந்த புத்தகம். என்ன தலைப்பே கொஞ்சம் சர்ச்சைக்குரியதாக… வித்தியாசமானதாக இருக்கே என்ற யோசனையின் பின் சரி வாங்கலாம்ன்னு முடிவு பண்ணி நிர்வாகத்திடம் கேட்டா இப்போதைக்கு ஸ்டாக் இல்லை சார் வந்ததற்குப் பின்னர் தகவல் சொல்றோம்ன்னு சொன்னாங்க. சரி வந்ததும் வாங்கிக்கலாம்ன்னு இருந்தேன். மறுமுறை சில புத்தகங்கள் ஆர்டர் பண்ணப்ப சார் நீங்க கேட்ட […]

புத்தகப் பார்வை : உப்பு வேலி

இராஜாராம் வாசிப்பின் மூலம் பல விடயங்களை தெரிந்துகொள்கிறோம். ஆனால் வாசிக்கும்போது இருக்கும் கோபமும், வெறியும் தற்போதைய சூழலின் நடைமுறை அரசியல், அரசியல்வாதிகள், வீராப்பு வசனங்கள் கேட்கும்போது எதைப் பேசவேண்டுமோ, அதைப்பற்றி பேசவே இல்லையே, நாமும் பள்ளியில் எதைப் படிக்கனுமோ அதைப் படிக்கவில்லையே என்ற ஆதங்கமும் படிக்காமல் போனதன் காரணம் திட்டமிட்ட அரசியல்தான். இன்று திருவள்ளுவருக்கு பாடப்புத்தகங்களில் முப்பரிநூல் போடும் அரசியல், 1947, 1957 காலகட்டத்தில் ஒரு சில ஆரம்ப பாடசாலை நூலை பார்க்கும்போது அங்கேயே நூலும், குடுமியும் […]

புத்தகப் பார்வை : காற்றின் நிறம் சிவப்பு

பரிவை சே.குமார் ஒரு தொடரை – நாவல் – பலர் சேர்ந்து வாரம் ஒருவர் என எழுதினால் எப்படியிருக்கும் என்பதை அகம் மின்னிதழ் நண்பர்கள் முயன்று, அதில் வெற்றியும் பெற்று கலக்கல் ட்ரீம்ஸ் மூலமாக 2018-ல் புத்தகமாகவும் ஆக்கியிருக்கிறார்கள். இது போன்ற ரிலே-ரேஸ் வகைக் கதைகளுக்கு முன்னோடி குமுதம் என்றும் அவர்கள் ஆரம்பித்து வைத்த பின்தான் மற்ற பத்திரிக்கைகள் பல எழுத்தாளர்களை ஒன்றிணைத்துத் தொடர்களை வெளியிட ஆரம்பித்தன என்றும் அப்படி நாமும் நமது முகநூல் களமான ‘அகம் […]

புத்தகப் பார்வை : வேல ராமமூர்த்தி கதைகள்

அழகு ராஜா ஆதி ஆயுதம், வேட்டை இரு சிறுகதை நூல்களின் தொகுப்பே இந்நூல். நண்பர் ஒருவர் என்னிடம் ஏன் நீங்க நாவல்,சிறுகதை,கவிதை நூல் வாசிக்குறீங்கே இந்த இலக்கியம் வரலாறு அரசியல் வாசிக்க மாட்டீங்களான்னு ? கேட்டார்.சிறு வயதில் இருந்தே புத்தகம் வாசிக்கிற ஆர்வம் இருக்கத்தான் செய்தது என்றாலும் புத்தகங்களை தேர்வு செய்து வாசிக்கத் தெரியாது. அவரிடம் முதலில் நம் மண்ணையும் மக்களையும் பற்றிப் பேசும் புத்தகங்களை வாசிப்போம், பிறகு மற்ற புத்தகங்கள் வாசிக்கலாம் என்றேன். இந்த நூலில் […]

புத்தகப் பார்வை : காவியலோகம் – வாசிப்பனுபவம்

ஆமினா முஹம்மத் ஒரு வாசகனை இலகுவாக தன் மொழிக்குள் பயணப்படவைக்கும் மந்திரம் கற்றவனே நல்ல எழுத்தாளர் என்பேன். மனதிற்கு கட்டளையிட மறுத்து மூளை சோர்வுற்றபோதுதான் இந்த முடிவுக்கு வந்திருந்தேன். வாங்கி வைத்திருக்கும் புத்தகத்தை வாசித்தாக வேண்டும் என்ற சுய நிபந்தனையோடு வாசிக்கத் தொடங்கிய ஒரு புத்தகத்தை இரண்டு நாட்களாக பாடுபட்டும் இரண்டு சிறுகதைகளைத் தாண்ட என் மூளை ஒத்துழைக்கவில்லை. சோர்ந்து போனது. நிபந்தனைகளிடம் மன்னிப்பு கோரிவிட்டு இலகுவான வாசிப்பைத் தரும் வேறொரு புத்தகத்தை நாடியபோதுதான் மீரான் மைதீன் […]

கட்டுரை : குற்றப்பரம்பரை – வேயன்னா

(அகல் மின்னிதழில் 2018- மே மாதம் வெளியான கட்டுரை) பரிவை சே.குமார். ஒரு நாவலை வாசிக்கும் போது அதில் ஏதோ ஒரு கதாபாத்திரத்தின் பின்னே நாம் பயணிக்க ஆரம்பித்தால் அந்த நாவல் வாசிப்பு நிச்சயமாக நமக்கு ஒரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். அந்தச் சுவையை பொன்னியின் செல்வன் வாசிக்கும் போது வந்தியத்தேவனுடனும்… உடையார் வாசிக்கும் போது இராஜராஜனுடனும்… கடல்புறா வாசிக்கும் போது கருணாகரப் பல்லவனுடனும்… ஜலதீபத்தில் இதயச் சந்திரனுடனும்… யவனராணியில் இளஞ்செழியனுடனும்… சிவகாமியின் சபதத்தில் நரசிம்மவர்மப் பல்லவனுடனும் […]

புத்தகப் பார்வை : மயானக்கரை வெளிச்சம்

ஆமினா முஹம்மத்  ‘முதல் பக்கத்தை/கதையைத்  தாண்ட முடியல. அவ்ளோ கனமாக/சோகமாக இருந்தது.’ என்று எளிதாக சம்பிரதாயமாய் நமக்கு நாமேச் சொல்லி ஒரு வாசிப்பின் தொடர்ச்சியை நமக்குநாமே தடையிட்டுக்கொள்ள முடியும். சிறுகதைத் தொகுப்பின்  சவுகரியமே 10 பக்கங்களுக்குள் வாசிப்பைத் தற்காலிகமாக முடித்துவிட்டு அடுத்த வேலைக்குத் தாவலாம் என்பதுதான் அல்லவா? நாவலில் இந்த சேட்டைகள் நடக்காது. ஆனால் எல்லா வார்த்தைகளும் சம்பிரதாய வார்த்தைகள் அல்ல. நிஜமாகவே கனம் நிறைந்த எழுத்துகள் தரும் மனக்குலைவு கொஞ்சம் நஞ்சமல்ல.  அந்த வகை எழுத்துக்களைச் […]

புத்தகப் பார்வை : மாயமான் (சிறுகதைகள்)

மாயமான்… கி.ராவின் வட்டார வழக்குச் சிறுகதைகளின் தொகுப்பு,  சபரிநாதன் அவர்களின் தொகுப்பாய் காலச்சுவடு தமிழ் கிளாசிக் சிறுகதைகள் வரிசையில் 2018-ல் வெளிவந்த புத்தகம் இது. புத்தகத்தில் மொத்தம் 17 கதைகள்… எல்லாமே கிராமத்து வாழ்வை, மனிதர்களை, அவர்களின் மனங்களை நம் கண் முன்னே நிறுத்தும் கதைகள். வட்டார வழக்கில் எழுதுவது என்பது மிகப்பெரிய சவால். அந்தப் பகுதியில் பிறந்து வளர்ந்தவர்களைத் தவிர, வாசிக்கும் மற்றவர்களுக்குப் பல வார்த்தைகள் புதிதாய் இருக்கும்… சிலவை சுத்தமாகப் புரியாது. அப்படி இருந்தும் […]

Shopping cart close