புத்தக வெளியீட்டில் கால்பதித்த கடந்த ஓராண்டில் பல புத்தகங்களைப் பதிப்பித்துச் சிறப்பாகப் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் எங்களது கேலக்ஸி பதிப்பகம் மண் சார்ந்து எழுதும் எழுத்தாளர்களுக்கான ‘பாண்டியன் பொற்கிழி’ விருது ஒன்றை அறிவித்து இந்தாண்டு முதல் கொடுக்க ஆரம்பித்திருக்கும் வேளையில், வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
மொத்தப் பரிசுத்தொகை : ரூ. 12000
முதல் பரிசு : ரூ. 5000
இரண்டாம் பரிசு : ரூ. 3000
மூன்றாம் பரிசு : ரூ. 2000
சிறப்பு பரிசு: ரூ. 1000 x 2
இறுதித்தேதி : 20/10/2023
அனுப்ப வேண்டிய முகவரி : galaxybs2022@gmail.com
விதிமுறைகள் :
- கதைகள் 1200 முதல் 1500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.
- கதைக்களம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக மற்றவர்களின் மதங்களைப் புண்படுத்தும், இழிவுபடுத்தும் கதைகளாக இருக்கக் கூடாது. அப்படியான கதைகள் நிராகரிக்கப்படும்.
- கதைகளை மின்னஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும். கண்டிப்பாக யுனிகோட் (Unicode) எழுத்துருவில் Word Document File-ஆக அனுப்பவேண்டும். தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
- கதை உங்களது சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். பிறரது கதைகளையோ, மொழிபெயர்ப்புக் கதைகளையோ, இதற்கு முன் பத்திரிக்கைகளிலோ இணைய இதழ்களிலோ வெளியான கதைகளையோ அனுப்பக் கூடாது.
- ஒருவர் ஒரு கதை மட்டுமே அனுப்பலாம்.
- பரிசுத்தொகை பணமாகவோ, புத்தகமாகவோ (வெற்றி பெற்றவர் விருப்பத்தின் பேரில்) வழங்கப்படும்.
- இறுதி நாளுக்குப் பின் கால நீட்டிப்பு செய்ய இயலாது என்பதால் அதற்குப் பின்வரும் கதைகள் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
- யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்து கொள்ளலாம், வயது வரம்பு இல்லை.
- போட்டிக்கான கதை தங்களது சொந்தப் படைப்பே, வேறு இதழ்களுக்கோ, போட்டிகளுக்கோ அனுப்பப்படவில்லை, போட்டி முடியும் வரை வேறு எதற்கும் அனுப்பமாட்டேன் என்ற உறுதிமொழி கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். அப்படி அனுப்பியது தெரிய வந்தால் தங்கள் கதை போட்டியில் இருந்து நீக்கப்படும்.
- தங்களது முகவரி மற்றும் செல்போன் எண்ணை மறக்காமல் மின்னஞ்சலில் குறிப்பிட வேண்டும்.
- இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் 12 கதைகள் எங்கள் பதிப்பத்தில் புத்தகமாக வெளியிடப்படும்.
- இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் கதையை எழுதிய எழுத்தாளர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.
- போட்டி முடிவுகள் 2023 நவம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்.
- நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
மறந்து விடாதீர்கள்… ஒரு மாதம் இருக்கிறது. நிதானமாக, நல்ல கதைகளை அனுப்பி வெற்றிவாகை சூட வாழ்த்துகள்.
கேலக்ஸி பதிப்பகம்.
Add comment
You must be logged in to post a comment.