நபி(ஸல்) அவர்களிடம் வந்த முதல் இறை வசனம், ‘படி(இக்றா)’ என்பதுதான். ஏன் இறைவன் ‘படி’ என்று சொன்னான் என்பதை புத்தகம் வாசித்தால் புரியும்.
ஒவ்வொரு புத்தகமும் பல பொக்கிஷங்களை தன் பக்கங்களுக்கு இடையில் மறைத்து வைத்துள்ளது. நாம் வாசிக்கும்போது அவை அழியாத செல்வங்களாக நமக்குள் வந்துவிடுகிறது. வாசிப்பு இல்லாதவருக்கு அவரவரின் வாழ்வனுபவம் மட்டுமே. ஆனால் வாசிப்பவருக்கோ வேறுபட்ட பல்வேறு மக்களின் வாழ்வனுபவம் கிடைக்கும். இந்த அனுபவங்கள் அனைத்தும் நம் பார்வையை மேலும் விசாலமாக்கும்
அதுமட்டுமில்லை. இருந்த இடத்திலிருந்துகொண்டே, பல நூறு வருடத்திற்கு முன் இருந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று காவியங்களைச் சொல்லும் மாயாஜாலம் புத்தகங்களுக்கு உண்டு.
நம் அடுத்த தலைமுறைக்கு எது விட்டுச் செல்கிறோமோ இல்லையோ புத்தக வாசிப்பை விதைத்து செல்வோம்.
-நசீமா ரசாக், எழுத்தாளர்