பெண்ணையாறு முதல் பம்பா வரை
மோகன் ஜி சிறுபிராயத்தில் கடலூரில் வசித்த நாட்களில் தென்பெண்ணையாறு தான் எங்களுக்கு தேம்ஸ், ரைய்ன், கங்கை, கோதாவரி எல்லாமே. அந்த நாட்களில் பெண்ணையாற்று நீரும் சுத்தமாகவே இருக்கும். வீட்டுக்குத் தெரிந்தும் தெரியாமலும் அங்கு குளிப்பதுண்டு. அதன் கரையிலே தான் குடும்ப மூத்தோர்கள் சரீரம் நீத்ததும், நான் அதன் நீரில் முங்கி நினைப்பொழிக்க முயன்றதுவும்.. நினைவுகளும் நதியில் முங்கிய மாத்திரத்தில் கரைந்து விடுமா என்ன? பின்னர், பெண்ணையாற்றைக் கடந்து போவதும் வருவதுமாய் காலம் போயிற்று. கடக்கும் தோறும் அந்த […]