Galaxy Books

தொடத் தொட தொடர்கதை நீ….-2

ஆர்.வி.சரவணன் முன்கதை : காதல் பிரச்சினையால் ஊருக்கே போகாத கதைநாயகன் மாதவன் நண்பனின் திருமணத்துக்காகத் தட்டமுடியாமல் ஊருக்கு வந்த போது திருமண மண்டப வாசலில் இருக்கும் பேனரில் தன் முன்னாள் காதலி மீராவின் போட்டோ இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாக, இங்கே ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாதென நினைத்தபடி திரும்பிய போது, எதிர்பாராதவிதமாக ஒருவர் மீது மோத, அவரை ஏறிட்டுப் பார்த்தவனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது. **** மாதவன், யார் மீது மோதி கொண்டானோ அவரை நிமிர்ந்து […]

கட்டுரை : நம்பினால் நடக்கும்

நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு மாவீரன் அலெக்சாண்டர் உலகத்தை வென்று வரப்புறப்பட்ட போது தம் சொத்துக்களையெல்லாம் நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். அப்போது ஒருவர், ‘எல்லாவற்றையும் கொடுத்துவிட்டீர்களே உங்களுக்கு என்னதான் மிஞ்சபோகிறது?’ என்று கேட்டார். ‘நம்பிக்கை’ என்ற ஒரே சொல்லில் பதில் சொன்னார் அலெக்சாண்டர் ஆம் அவர் தன்னை நம்பினார். வென்று காட்டினார். நம்பினால் எதுவும் நடக்கும்.ஆகவே எந்த ஒரு செயலிலும் எளிதில் நம்பிக்கை இழக்காதீர்கள். எதிலும் நம்பிக்கையோடு செயல்படுங்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை எனும் போது அதனை இழந்தால் வாழ்க்கையையும் இழப்பது போலத்தானே? […]

கட்டுரை : பிறருக்காகவும் கொஞ்சம் வாழ்வோமே..!

நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு எழுத்தாளர் நத்தம் எஸ்.சுரேஷ்பாபு, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகில் இருக்கும் நத்தம் என்னும் சிறிய கிராமத்தில் வசிப்பவர். நத்தம் ஸ்ரீ திருவாலீஸ்வரர் ஆலயக் குருக்களாக இருக்கும் இவருக்கு எழுத்தின் மீது தீராக்காதல். 1993 முதல் எழுதி வரும் இவர் நகைச்சுவை, சிறுவர் கதைகள், ஒரு பக்க கதைகள் அதிகம் எழுதியிருக்கிறார், எழுதி வருகிறார். கோகுலம் சிறுவர் இதழ், கல்கி, குமுதம், பாக்யா, ஆனந்தவிகடன், குங்குமம், இந்து தமிழ் போன்ற இதழ்களிலும் பல இணைய இதழ்களிலும் இவரது […]

தொடத் தொட தொடர்கதை நீ…. – 1

ஆர்.வி.சரவணன் எழுத்தாளர் அறிமுகம் : எழுத்தாளர் ஆர்.வி .சரவணன் அவர்களின் சொந்த ஊர் கும்பகோணம். பணி நிமித்தம் சென்னையில் இருக்கிறார்.  தற்போது முகநூலில் தொடர்ந்து எழுதி வரும் இவர் இளமை எழுதும் கவிதை நீ…., திருமண ஒத்திகை என்ற இரு நாவல்களை வெளியிட்டுள்ளார். (திருமண ஒத்திகை நாவல் பாக்யா வார இதழில் தொடர்கதையாக வெளி வந்து சிறப்பான வரவேற்பைப் பெற்றது.)  கல்கி, குமுதம், குங்குமம், தினமணிக்கதிர் என வார, மாத இதழ்களில் இவரது சிறுகதைகள் இதுவரை 9 […]

சிறுகதை : ஆணவம்

இராஜாராம், அபுதாபி தரையில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவைப் பார்த்து ‘பவி சாப்பிட வா… மெதுவா எந்திரிச்சு கைய கழுவிட்டு வா’ என்றாள் அவளின் அம்மா மீனா. இரு உதடுகளையும் உள்பக்கமாக மடித்து இடதுகையை மெதுவாக அதே சமயம் பொறுப்பாக ஊண்டி எழுந்தாள் ஏழரைமாத கர்ப்பிணியான பவித்ரா. எழுந்து சற்றே நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கையைக் கழுவிவிட்டு டைனிங் டேபிளில் போய் அமர்ந்தவள் ‘ஏம்மா நீ சாப்பிடலயா..?’ எனக் கேட்டதும் ‘நா சாப்பிட்டேன்.’ என்றாள் […]

சிறுகதை : கருத்தப்பசு

பரிவை சே.குமார் கண்ணப்பக் கோனாருக்கு எப்பவும் கருப்பு மேல அப்படி ஒரு ஈர்ப்பு. அவருக்கு வாச்ச மதுரவல்லியும் கருப்புதான். தன்னோட பொண்டாட்டி மேல உயிரையே வச்சிருந்தார். அவரோட தாத்தா காலத்துல இருந்தே நில நீட்சி, ஆடு மாடுன்னு வாழ்ந்து வரும் குடும்பங்கிறதால சின்ன வயசுல இருந்தே ஆடு மாடு வளக்கிறதுல அவருக்கு ரொம்ப ஆர்வம். எல்லா மாட்டு மேலயும் பாசமிருந்தாலும் அவரோட கவனிப்பெல்லாம் அந்த கருத்தப்பசு கருப்பாயி மேல மட்டுதான் என்பது எல்லாருக்கும் தெரியும். அதுவும் மனைவியை […]

பழைமை நினைவுகள் – சுஜாதா

படித்ததில் ரசித்தது மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில்  நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன  வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம்  என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். “யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!” என்று  கண் சிமிட்டலுடன் கேட்டார். நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் […]

கட்டுரை : உறவுகள் மென்மையானது

எழுத்தாளர் பால்கரசு சசிகுமார், அபுதாபி மனித வாழ்வுக்கு உரம் சேர்ப்பது உறவு. நெருக்கமாக இருக்க வேண்டிய உறவுகளெல்லாம் இப்போது விரிசல் கண்டு வருகின்றன. இரு வழிப் பாதையாக இருக்க வேண்டிய உரையாடல்கள் ஏனோ பல நேரங்களில் ஒரு வழிப்பாதையாகி விடுகிறது. உரையாடல் மனங்களைத் திறந்து உறவை ஆழமாக்கும். பலருக்கு உரையாடல் என்றால் என்ன என்கிற தெளிவு கிடையாது. பல குடும்பங்களில் அது பெரும்பாலும் உரையாடலாக இருப்பதில்லை. மாறாக, தங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் பிறர் மீது திணிக்கின்ற யுத்தகளமாகவே […]

தெரிந்து கொள்வோம் : எலைன் @ கௌஹர் ஜான்

எழுத்தாளர் கணேஷ் பாலா இந்தப் படத்திலிருக்கும் பெண்மணியைத் தெரியுமா? இந்தியாவின் முதல் கோடீஸ்வரப் பாடகி இவர்தான். 10 கிராம் தங்கத்தின் விலை 20 ரூபாயாக இருந்த காலத்தில் ஒரு பாடல் பதிவுக்கு 3 ஆயிரம் சம்பளம் வாங்கியவர் இவர். இன்றையப் பண மதிப்பில் பார்த்தால் ஒரு கோடி ரூபாய் ஒரு ரெகார்டிங்குக்கு. கிராமபோன் நிறுவனங்கள் இவரின் பாடலைப் பதிவு செய்து விற்று நிறையச் சம்பாதித்தார்கள். நகைப் பிரியரான இவர், வாழ்நாளில் ஒருமுறை அணிந்த நகையை மறுமுறை அணிந்ததில்லை […]

படித்ததில் பிடித்தது : ஆச்சிமார் வாதம்

கவியரசு கண்ணதாசனின் கவிதை கவியரசு கண்ணதாசன் அவர்கள் தன் மண்ணின் ஆச்சிமார் (மாமியார் – மருமகள்) வாதத்தை மிக அழகான கவிதையாக ஆக்கி வைத்திருக்கிறார். முந்தைய தலைமுறையின் பழமைகளைத் தேடி எடுத்துத் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து வரும் தேவகோட்டை நண்பர் காளிதாஸ் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த கவிதை இது. கவிதையின் அழகுக்காகவே உங்கள் வாசிப்பிற்காக ‘படித்ததில் ரசித்தாய்’ இங்கே… செட்டிநாட்டு மாமியாரின் வாதம் நல்லாத்தான் சொன்னாருநாராயணச் செட்டி! பொல்லாத பெண்ணாகபொறுக்கி வந்து வச்சாரு […]

Shopping cart close