வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
————————————————–
முந்தைய பகுதிகளை வாசிக்க
அத்தியாயம் – 1
அத்தியாயம் – 2
அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5
அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7
அத்தியாயம் – 8
அத்தியாயம் – 9
அத்தியாயம் – 10
அத்தியாயம் – 11
————————————————–
நான்காவதாக தலைமை ஏற்கிறார்கள் காலித் பின் வலீத் ரலி அவர்கள். ஆம் உஹது யுத்தத்தில் குறைஷிகளின் குதிரைப்படை தளபதியாக நின்று, முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்திய அதே காலித் பின் வலீத் ரலி அவர்கள் தான் தலைமை ஏற்று இருக்கிறார்கள்.
தற்போது தான் இஸ்லாத்தை ஏற்றிருந்தார்கள். அதற்குள் முஸ்லிம்களுக்கு தளபதியாக பொறுப்பேற்றார்கள். தற்போது முஸ்லிம்கள் அசுர பலத்தை அடைந்திருந்தார்கள்.
காலித் பின் வலீத் அவர்களின் தலைமையில் படைகள் முன்னேறியதைப் பார்த்த ரோமப் பேரரசின் படைகள் முதன்முறையாக பயந்தது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கத் தொடங்கியது. சற்று நேரத்தில் ரோமப் படைகள் மூத்தாவை விட்டு விரட்டி அடிக்கப்பட்டது. இஸ்லாமிய படைகள் வெற்றியுடன் மதினா திரும்பியது. இதுவரை அரபு உலகில் மட்டும் சண்டை செய்துக் கொண்டிருந்த நபிகளாரின் படைகள் தற்போது அதைத் தாண்டி ஐரோப்பா உலகின் ஆட்சி அதிகாரத்தை அசைத்துப் பார்த்தார்கள். இப்போது அரபு உலகில் இருக்கக் கூடிய அத்தனை அரசுகளும் நபிகளாரின் படைகளைப் பார்த்து பயப்பட துவங்கியது.
மக்கா வெற்றி:
மூத்தா போர் முடிந்த அதே நேரத்தில், ஹுதைபியா ஒப்பந்தத்தில் இரண்டு சாரார்களும் சண்டை போடக்கூடாது என்று குறைஷிகளோடு ஒப்பந்தங்கள் இருக்கும் நிலையில், மக்காவில் இருக்கும் பக்ர் கூட்டத்தார் குஸாஆ கூட்டத்தார் மீது ஒரு நாள் தாக்குதல் தொடுத்தார்கள். இருவரும் கடுமையாக மோதிக் கொண்டு மக்காவின் புனித பள்ளியின் எல்லை வரைச் சென்று விட்டார்கள்.
குஸாஆ கூட்டத்தார் “புனித எல்லைக்கு வந்து விட்டோம். இனி சண்டையிடுவது கூடாது” என்றும் சொல்லி பார்த்தார்கள். ஆனால் பக்ரு கூட்டத்தார் எல்லை மீறினார்கள். குஸாஆ கூட்டத்தார்களில் சிலர் இறந்தும் போனார்கள். ஒப்பந்தத்தை மீறி குரைஷிகள் பக்ர் கூட்டத்தார்களுக்கு உதவி செய்ததோடு அவர்களில் சிலர் கூட்டத்தில் கலந்தும் இருந்தார்கள். இதனால் ஒப்பந்தம் முறிந்து போனது.
இதை கவனித்த குஸாஆ கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கிருந்து கிளம்பி விரைந்து சென்று செய்தியை நபிகளாரிடம் எத்தி வைத்தார். “குறைஷிகள் ஒப்பந்தத்தை முறித்து எல்லை மீறிவிட்டார்கள்” என்று. உடனடியாக நபி அவர்களும் களத்தில் இறங்கி விட்டார்கள். ஒரு படையைத் திரட்டினார்கள். அதோடு மதினாவை சுற்றி இருக்கும் அத்தனை கூட்டத்தாரும் கிளம்பி விட்டார்கள். மிகப்பெரிய கூட்டமாக அது மாறிப்போனது.
இடையிலே சமாதான பேச்சு வார்த்தை நடத்த அபூ சுபியானை அனுப்பி வைத்தனர். “எங்கள் கூட்டத்தார்கள் செய்தது தவறு. அதற்கு இழப்பீடு தந்து விடுகிறோம். நம்முடைய ஒப்பந்தத்தை நீட்டிக்கொள்வோம்” என்று பேசி முடிவு செய்ய மதினாவிற்கு வந்தார். ஆனால் அவரை சந்திக்க நபியவர்கள் மறுத்துவிட்டார்கள். பேச்சுவார்த்தை நடத்த முடியாமல் அவரும் திரும்பி விட்டார்.
பிறகு நபியவர்கள் கூட்டத்தை அழைத்துக் கொண்டு மக்காவை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.
மதினாவிலே நயவஞ்சகர்களும் இருந்ததால் ‘மக்காவுக்கு தான் செல்கிறோம்’ என்பதை நபிகளார் யாரிடமும் சொல்லவில்லை. நயவஞ்சகர்களை நம்ப வைக்க வேண்டும், என்பதனால் ஒரு சிறு கூட்டத்தை வேற ஒரு பகுதியை நோக்கி அனுப்பி வைத்தார்கள்.
அவர்களும் நபிகளார் திரட்டிய படைகள் வேறு எங்கோ தான் செல்கிறது என்று நம்பினார்கள்.
ஹிஜ்ரி 8, கிபி 629ம் ஆண்டு, ரமலான் மாதம் மதினாவை விட்டு படைகள் கிளம்பியது. சுமார் 10,000 பேர் கொண்ட படையாக அது இருந்தது. ஆனால் தாமதமாகத்தான் நயவஞ்சகர்களுக்குத் தெரிந்தது நபிகளார் மக்காவை நோக்கித்தான் போகிறார்கள் என்று.
வேறு திசைக்கு சென்று இருந்த அந்தச் சிறுபடையும் மக்காவை நோக்கித் திரும்பியது. “விஷயம் கை மீறிப்போய் விட்டது. இனி ஒன்றும் பண்ண முடியாது” என்பதை புரிந்துக் கொண்டார்கள்.
போன படைகள் நான்காக பிரிந்துச் சென்றது. மக்காவின் எல்லையில் சில மோதல்கள் ஏற்பட்டது. அதிலே இரண்டு பேர் இறந்தும் போனார்கள். புனித எல்லைக்கு முன்பே மக்காவைச் சுற்றி படைகள் இறங்கியது. இரவில் “நான்கு திசைகளிலும் மக்காவாசிகளுக்கு தெரியும்படி நெருப்பை மூட்டுகள் ” என்றுச் சொன்னார்கள் நபிகளார்.
மக்காவை சுற்றி நெருப்பினுடைய ஒளிவட்டம் தெரிந்தது. அதைப் பார்த்ததும் மக்காவாசிகள் மிரண்டு விட்டார்கள்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
திங்கள்கிழமை தொடரும்.