தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 10


முந்தைய அத்தியாயங்களை வாசிக்க


அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2

அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9


லைபேசியில் தீப்தியின் பெயர் பளிச்சிட்டதைப் பார்த்ததும், அவசர அவசரமாக அதை தன் காதுக்கு கொடுத்தான்.


“தீப்தி..” அழைக்கும்போதே சரணுக்கு குரல் தழுதழுத்தது.


“சரண்..” பதில் சொன்ன தீப்தியின் குரலிலும் அதைவிட அதிகமான தழுதழுப்பு.


“தீப்தி, உனக்கொண்ணும் ஆகலையே?”


சரணின் கேள்விக்கு எதிர் முனையிலிருந்து விசும்பல்கள்தான் பதிலாக கிடைத்தன.


“ஆர் யூ ஆல்ரைட் தீப்தி?” சரண் மறுபடியும் கேட்டான்.


“நோ சரண். ஐயாம் நாட் ஆல் ரைட்.”


“ஏம்மா? என்னாச்சு?”


“நீ நல்லா இல்லாதப்போ நான் எப்டி நல்லாருக்க முடியும் சரண்?”


“எனக்கென்ன தீப்தி? நான் நல்லாதான் இருக்கேன்.”


“நீ பொய் சொல்றே.”


“நான் ஏண்டா உங்கிட்டப் பொய் சொல்லணும்?”


தீப்தியிடம் சில வினாடிகள் மௌனம்.


மறு முனையில் அமைதி நிலவவும், “தீப்தி? லைனில் இருக்கியா?” சரண் கேட்டான்.


“உன்னை ரொம்ப அடிச்சிட்டாங்களாடா? போலீஸ் ஸ்டேஷனில்?” தீப்தியின் குரல் கரகரத்தது.


“அ.. அதெல்லாம் ஒண்ணுமில்லை. இதெல்லாம் யார் சொன்னா உனக்கு?”


“என் அப்பா.”


“என்ன சொன்னார்?”


“உன்னை லாக்கப்பில் வச்சதை சொன்னார். அந்த இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லி உன்னை அடிக்க சொன்னதே அவர்தான்னு சொன்னார்.”


இம்முறை அமைதி காப்பது சரண் முறையாயிற்று.


“ரொம்ப வலிக்குதாடா?”


“அதெல்லாம் இல்லை. அதை விடு. நீ ஏன் வீட்டை விட்டுப் போனே?”


“நான் உன் வீட்டில் இருந்திருந்தா, நீ இப்ப உன் வீட்டில் இருந்திருக்க முடியாது சரண்.”


“என்ன தீப்தி சொல்றே?”


“நான் உன் வீட்டில் இருக்கிற வரைக்கும் உன்னை போலீஸ் ஸ்டேஷன்லேயே வச்சிடுவேன்னு என் அப்பா மிரட்டினார் சரண்.”


“உடனே பயந்துட்டியா நீ?”


“உனக்கொண்ணுன்னா நான் எப்படி பயப்படாம இருக்க முடியும் சரண்?”


“அதுக்காக? இப்டி உதறிட்டு கிளம்பிட்டியேம்மா?”


“அப்டி சொல்லாதே சரண். என் உயிர் இருக்கிற வரைக்கும் நான் உன்னை உதறவே மாட்டேன்.” தீப்தியின் குரலில் சரண் மீதான காதல் நிரம்பி வழிந்தது.


“தெரியும் தீப்தி”, சரணின் பதிலிலும் தீப்தியின் காதல் மீதான நம்பிக்கை ஒளிர்ந்தது.


“எனக்கு உன்னை இப்பவே பாக்கணும் தீப்தி.”


“நட்டு நடு ராத்திரி. காலையில் பேசிக்கலாம். இப்பத் தூங்கு.”


“உன்னைப் பாக்காம, நீ நல்லா இருக்கியான்னு தெரியாம, என்னால தூங்க முடியாது தீப்தி.”, சொன்ன சரண், “இப்ப நீ எங்கே இருக்கே? சொல்லு. நான் உடனே வரேன்.”


“நான் சேஃபாதாண்டா இருக்கேன். ஒரு ஹாஸ்டலில்.”


“ஹாஸ்டலா? ஏம்மா?”


“உன் வீட்டில்தான் நான் இருக்க கூடாதுன்னு சொன்னார் என் அப்பா. அதுக்காக நான் அவர் வீட்டில் இருக்கணும்னு இல்லியே?”


“ம். புரியுது.”


“ஐயாம் அ க்ரோன் அப் கேர்ள்டா சரண். மேஜர். நான் எங்கே இருக்கணும்னு நானே முடிவு பண்ணக் கூடாதா?”


“ஹாஸ்டல் பேரை சொல்லு. லொகேஷன் ஷேர் பண்ணு. நான் வரேன்.”


“நடு ராத்திரியில வேணாம் சரண். நீ வந்தாலும் உன்னைப் பாக்க விட மாட்டாங்க.”


“நீ ஹாஸ்டல் அட்ரஸ் சொல்லப் போறியா? இல்லை நான் லாக்கப்புக்கே திரும்பப் போயிடவா?”


“அய்யோ சரண். விளையாட்டுக்கு கூட அப்டி சொல்லாதே. என்னால தாங்க முடியாது.”


“அட்ரஸ்? லொகேஷன்?”


“உன் பிடிவாதம் இருக்கே? சரி லொகேஷன் ஷேர் பண்றேன். பாத்துக்கோ.”


“நீ கேட்டியேன்னு அட்ரஸ் ஆனுப்பியிருக்கேன். புறப்பட்டு வந்துடாதே என்ன?”


“ஓகே.” பட்டென்று சொல்லிவிட்டு சட்டென்று அலைபேசியை அணைத்த சரண், பரபரவென்று தன் பைக் சாவியைத் தேடினான்.



அவனைப் போலவே அவன் பைக்கும் தீப்தியைப் பார்க்க வேண்டும் என விரும்பியதோ என்னவோ, சாவி உடனேயே சிக்கியது. சரண் ஏறியதும் பைக்கும் காற்றாய் விரைந்தது.


“அப்பா, தீப்தி இருக்கிற ஹாஸ்டல் அட்ரஸ் அனுப்பியிருக்கா. அவளை நேர்ல பாத்தாதான் எனக்கு நிம்மதி. பாத்துட்டு வந்துடறேன். நீ அம்மாகிட்ட சொல்லாதே. கவலைப்படுவா” அப்பாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பியிருந்தான் அவன்.


“அம்மாதான் கவலைப்படுவாளா? அப்பா நான் உன்னைப பத்திக் கவலைப்பட மாட்டேனா?”


“அப்பா, ப்ளீஸ்…”


“சரி கிளம்பு. ஆனால் பிரச்சனை எதுவும் பண்ணாமல் பத்திரமா திரும்பி வா.”


சத்தியம் செய்யாத குறையாக அப்பாவிடம் உறுதி அளித்துவிட்டு வந்திருந்தான் சரண்.


நடு இரவில் தீப்தி அனுப்பியிருந்த முகவரியைக் கண்டுபிடிப்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது. உபயம் கூகிள் மேப்.


அங்கே கிடந்த அனேக எண்ணிக்கை குறுக்குத் தெருக்களில் கூகிள் மேப்பே குழம்பியது.


ஒரு வழியாக “அன்னை தெரஸா” மகளிர் விடுதி பெயர்ப் பலகை சரணின் கண்களில் விழுந்தது.


வாசலில் பைக்கை நிறுத்திவிட்டுப் பார்த்தான். 


கதவில் பெரியப் பூட்டு தொங்கியது. 


அதே போல் ஒரு பெரிய சைஸ் தொப்பையுடன் காவலாளி நாற்காலியில் உட்கார்ந்தபடியே குறட்டை விட்டுக் கொண்டிருந்தார்.


மதிலேறி குதிக்க சொல்லிய அவன் மனதை, “பிரச்சனை பண்ணாமல் வா”, என்றே அப்பாவின் வார்த்தைகள் மாற்றியது.


பொறுப்பாக சென்று காவலாளியிடம், “கதவைத் திறங்க” என்றான் சிக்கனமாக.


“முடியாது” என்றார் அந்தக் காவலாளி அதைவிட சிக்கனமாக.


“தீப்தியை அலைபேசியில் அழைத்தான் சரண்.


“சரண்? என்னடா?”


“ஹாஸ்டக் வாசலில் நிக்கிறேன்.”


“நான் சொல்ல சொல்லக் கேட்காம..”


“வாட்ச்மேன் தாத்தா என்னை உள்ளே விட மாட்டேங்கிறார். நீ வார்டன் கிட்டப் பேசி, கேட்டை திறக்க சொல்லு…”


“என்ன உலகம்டா இது? எங்க கற்பையெல்லாம் வாட்ச்மேனும் வார்டனும்தான் கட்டிக் காப்பாத்துறாங்க. ஆர்ன்ட் வீ அடல்ட்ஸ்? என்ன ரூல்ஸோ?”


“முதல்ல நான் உள்ளே வர வழி பண்ணும்மா.”


“ஒரு நிமிஷம் இரு. வார்டன்கிட்டப் பேசுறேன்.”


ஒரு நிமிஷம் இரண்டு மூன்று நிமிடங்களாகி, ஐந்து நிமிடங்களும் கடந்தன.


சரணின் பொறுமை காணாமல் போனது. 


அவன் கைகள் தீப்தியை அழைக்க அலைபேசியைத் தேடிய நேரம், தீப்தியே அங்கே வந்து கொண்டிருந்தாள்.


விடுதி கட்டிடத்தின் உள்ளிருந்த அவள் விடுதியின் கதவருகே, அவன் நிற்குமிடம் வருகிற தூரம் பத்தே தப்படி என்றாலும், பல நூறு மைல்களாக நீண்டு தெரிந்தது சரணுக்கு. 


இடையில் கிடந்த கதவை வெடி வைத்து தகர்க்க விடும்பினான்.


கம்பிகள் வழியே சரண் கைகளை தன்னுடையதில் ஏந்திக் கொண்டாள் தீப்தி. 


அவள் விழிகள் சரணின் முகத்திலும் உடலிலும் இருந்த காயங்களை வலியோடு வருடின.


“ஸாரி சரண். என்னாலதானே இதெல்லாம்.”


“இதென்ன பிரமாதம்? உனக்காக மைக் டைஸன் உயிரோட இருந்திருந்தா அவர் கூட பாக்ஸிங் ரிங்லேயே இறங்குவேன் நான்” சரண் புன்னகைத்தான்.


தீப்தியின் முகத்திலும் புன்னகையை வரவழைக்க விரும்பினான்.


“ஆனா மைக் டைஸன் உன்னைக் காயப்படுத்த மாட்டார். அவர் காதலுக்கு வில்லன் இல்லியே? நமக்கு வில்லன் என் அப்பாதான்.”


“இப்ப எதுக்கு வில்லனைப் பத்தி?” சரண் மேலும் ஏதும் பேசுவதற்கு முன் அவன் அலைபேசி அழைத்தது.


அவன் அம்மா.


“சரண்? இந்த நேரத்துல எங்கடாப் போனே?”


“பயப்படாதேம்மா. நான் வீட்டுக்குதான் திரும்ப வந்துகிட்ருக்கேன்.”


“யாரு அப்பாவா?” என்றாள் தீப்தி.


“அம்மா”. என்றான் சரண்.


“சரி, நீ கிளம்பு..” தீப்தி சொல்லியபடியே தன் கைகளை விடுவிக்க முயல்கையில், அவற்றை இழுத்து இறுகப் பற்றிக்கொண்டான் சரண். 


அந்த மெல்லிய கைகளில் குனிந்து முத்தமிட்டான்.


“ஐ லவ் யூ தீப்தி.”


“ஐ லவ் யூ சரண்.”


வீடு திரும்பிய சரணின் மனதை விட்டு லாக்கப் காயங்களின் வலி கணிசமாக மறைந்திருந்தது.


“வில்லனை, தீப்தியின் அப்பா சதாசிவத்தை எப்படி சமாளிப்பது?


யோசனைதான் பிரதானமாக இருந்தது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *