காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் (இலங்கை)
வாசிப்பு ஒருவரை முழுமையடையச் செய்கின்றது. ”கண்டது கற்கப் பண்டிதனாவான்” என்பது முதுமொழி. ஆனால் எதனைக் கற்கவேண்டும் என்பதற்கு ஒரு வரன்முறை வேண்டும். அதற்கான வழிமுறையை நமக்கு வள்ளுவனார் வரையறை செய்துள்ளார்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
என்னுங் குறட்பாவில் ”கற்பவை” என்னும் சீரில் அதனைச் சுருங்கக் கூறியுள்ளார்.
படிக்கப்படிக்க நாம் படிக்காதவை புரியும். மேலும் படிக்கத் தூண்டும். மொழி வாலாயமாகும். வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களே பிற்காலத்தில் அறிஞர்களாகவும், படைப்பாளிகளாகவும் மாற்றமடைகின்றனர்.
எனது சொந்த வாழ்வின் அனுபவத்தில் எனது இளமைக் காலத்தில் நானொரு தீவிர வாசகனாக இருந்தேன். எனக்கு மொழி வாலாயமானது. அதனால்தான் இன்று பல காவியங்களையும். வேறு பல்துறைசார்ந்த படைப்புகளையும் யாத்தளிக்க முடிகின்றது. மற்றவர்களும் அவ்வாறே.
எனவே இளைஞர்களே வாசியுங்கள், வாசியுங்கள். முழு மனிதராகுங்கள்.
வாழ்த்துகள்.