Galaxy Books

வாசிப்பு மட்டுமே – கவிஞர் இசாக்

வாசிப்பு என்பது, சிந்தனைக்குப் புத்துணர்வூட்டும் செயல். ஒவ்வொரு நூலை வாசித்து முடிக்கும் போது, இன்னொருவரின் அறிவை, ஆற்றலை, அனுபவத்தைப் பெறுகிறீர்கள். எளிதான வழியில் நம்பிக்கையை, உற்சாகத்தை பெற ஒரே வழி வாசிப்பு மட்டுமே. -கவிஞர் இசாக்

குழந்தைகளுக்கான கதை சொல்லல் – பாலாஜி பாஸ்கரன்

சிறுவயதிலிருந்து கிறிஸ்தவப் பள்ளிக் கூடங்களில் படித்திருந்ததால் பைபிள் பற்றியும் இயேசுநாதர் பற்றியும் ஓரளவுக்கு அறிந்திருந்தேன்… முதுகலைப் படிப்பு படிக்கும் காலத்தில் நண்பன் சையது அப்துல் சத்தார் மூலமாக இஸ்லாம் பற்றிய அறிமுகம் ஒரளவுக்கு கிடைத்தது… “இஸ்லாம் மதமல்ல மார்க்கம், அப்பு” என்று அடிக்கடிச் சொல்வான்… அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு வாக்கில், இணையத் தமிழ் நண்பர்களிடம் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அன்று தெரிந்தவனாகத் தொடங்கி இன்று தம்பியாகிப் போன முஹம்மது இஸ்மாயில் புகாரி மூலமாக இன்னும் இன்னும் […]

வாசிப்பை நேசிப்போம் – ஜெஸிலா பானு

மனிதன் உயிர் வாழ உணவு, உடை, உறைவிடம் என்பதோடு புத்தகத்தையும் சேர்த்துக் கொண்டால் சிறப்பு. காரணம் ஓர் அறையில் புத்தமில்லையென்றால் அது உயிர் இல்லாத உடலைப் போன்றது. சுவாசிக்க ஆக்ஸிஜன் இன்றியமையாதது, சிந்திக்கவும் எண்ணங்களை விரிவாக்கவும் நல்ல புத்தகங்களின் வாசிப்பு அவசியமானது. வாசிக்கும் பழக்கம் நமக்குப் புது வார்த்தைகளைத் தேடித் தரும், கற்பனைத் திறன்களை அதிகரிக்கும், மாற்றுச் சிந்தனையை விரிவுபடுத்தும், நம்மை உற்சாகப்படுத்தும். நாம் பார்க்காத இடங்களைச் சுற்றிக் காட்டும், அறியாத வரலாற்றைக் கற்றுத் தரும். எங்கோ […]

வாசி வாசியென – அபுல் கலாம் ஆசாத்

உள்ளங்கையில் உலகை வைத்துக்கொண்டு வேண்டிய தகவல்களையும், மனமகிழ்வுகளையும் காணொலியாகப் பார்க்கும் வழக்கம் பரவலாக உள்ள் இந்தக் காலகட்டத்திலும், வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தங்கள் தேவையை அறிந்து தேடிச் சென்று வாசிக்கிறார்கள். செய்தித்தாள்கள் தொடங்கி இலக்கிய இதழ்கள் வரை வாசகர்களுக்குக் குறைவில்லை. அச்சுப் பதிப்புகள், இணையப் பதிப்புகள், மின் நூல்கள், என எல்லா வடிவத்திலும் எழுத்துகள் வாசகரை வந்தடைகின்றன. 1. கற்பனைத் திறன்:தகவலுக்கும் மனமகிழ்வுக்கும் காணொலி இருக்கையில் வாசிப்புக்கு நேரம் செலவிடுவது அவசியமா என்னும் கேள்வி சிலசமயங்களில் எழுகின்றது. […]

ஏன் படிக்க வேண்டும்? – ‘பெனாத்தல்’ சுரேஷ்

“சரியான முடிவுகள் அனுபவத்தால் எடுக்கப்படுகின்றன, அனுபவங்கள் தவறான முடிவுகளால் பெறப்படுகின்றன” – என்று ஒரு பழமொழி உண்டு. அனுபவம் பெற நம்முடைய முடிவுகள் மட்டுமே தவறானதாக இருக்கவேண்டியதில்லை. மற்றவர்கள் வாங்கிய அடியில் பாடம் கற்பதும் அனுபவத்தைத் தரும். மற்றவர்கள் என்பவர்கள் நாம் அறிந்த உறவினராகவோ ஊர்க்காரராகவோ இருந்தால், அப்படிப்பெற்ற அனுபவம் உறவையும் ஊரையும் தாண்டிப் பயன் தராது. உலகக் கிராமத்தின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு மனிதனின் அனுபவத்தையும் பெற புனைவுகளும் வரலாறும்தான் துணை. திரைக்காட்சிகளில் […]

ஒருவித கடமை – ஆசிப் மீரான்

தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருப்பவர்களுக்கு மொழியில் புலமை இயல்பாகி விடும். மொழியின் அழகுணர்ச்சி மட்டுமல்லாமல் மொழியின் மீதான ஆளுமையும் மேம்படும். பல்வேறு விதமான வாசிப்பனுபவங்கள் மனித மனங்களிடையே மாற்றத்தையும், புதிய அனுபவங்களையும் தர வல்லவை. தொடர்ந்த வாசிப்பினால் மொழி வசப்படுவதால் பேச்சாளுமையுமே கூட கை கூடும். நிறைய வாசிக்கையில் கலை, பண்பாடு குறித்த தெளிவும் அறிவும் மேலும் விரிவாகும். நம் மதிக்கூர்மையின் அளவு பெருக வாசிப்பும் ஒரு காரணமாக அமையுமென்பதால் வாசிப்பை நேசிப்பது ஒரு வித கடமையென்றே சொல்லலாம். […]

வாழ்வும்-வாசிப்பும் – சசி.S.குமார்

“நீர்க்கோல வாழ்வை நச்சி…” என்று கம்பன் எழுதிய வார்த்தைகள் வாழ்வின் நிலையாமையைச் சொல்லும். சின்னஞ்சிறிய வாழ்க்கை. சாசனம் எழுதித்தந்து நூறாண்டு வாழ்ந்தாலும், வாழ்நாட்கள் சற்று ஏறக்குறைய வெறும் 36,500 நாட்கள் தான். கல்பகோடி ஆண்டுகள் வாழ்கிற, வாழப்போகிற பேருலகில்…நமது வாழ்நாள் வெறும் 36,500 நாட்கள் தான். இதற்குள் தான் அத்தனை ஆரவாரம். அத்தனை அலட்டல். அத்தனை அழிச்சாட்டியம். அத்தனை அலட்சியம். இத்தனைக்கும் நூறாண்டு வாழ்வோம் என்பதற்கு எந்தவித உறுதியும் யாரும் தரவும் இல்லை. Trial & error […]

வாசிப்பு என்ன செய்யும்? – பேச்சாளர் ஹேமலதா

நான் மிகச்சிறந்த வாசிப்பாளரில்லை. சமீப வருடங்களில்தான் என் வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திருக்கிறேன். காலம் நம் மேல் வீசும் கற்களிலிருந்து தப்பித்துக்கொள்ள, புரிந்து கொள்ளவே இயலாத இவ்வாழ்வைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வாசிப்பு பழக்கம் பேருதவியாக இருக்கலாம். ஒரு சரியான புத்தகத்தின் முன்னிலையில் நாம் ஒரு காலி பாத்திரமாக நம்மை மாற்றிக்கொள்ள மெல்ல நம்மை நிரப்பிக்கொள்ளலாம். நம்மை நாமே காலி செய்வதும் நிரப்பிக் கொள்வதும் தொடர் நிகழ்வுகளாக நடக்கும் வாசிப்பினூடே. புத்தகங்கள் தரும் அறிவு வாழ்வு தரும் அனுபவத்தோடு இணை […]

Shopping cart close