Galaxy Books

சிறுகதை : உனக்கே உயிரானேன்

தசரதன் காதல் வந்து விட்டாலே தலை, கால் தெரிவதில்லை.  இதனால் தன் மீது உண்மையுள்ள பாசத்தையும் நேசத்தையும் கொண்டுள்ள உறவுகளையும் நினைத்துப் பார்ப்பதில்லை. முரளி இந்த நிலையில் தான் இருந்தான்.  தன் மீது அளவுக்கு அதிகமான பாசத்தை பொழியும் அக்கா சிவகாமியையும், இவன் மேல் உள்ளப்பூர்வமான நேசத்தைக் கொண்டு கல்யாணக் கனவோடு இருக்கும் அக்கா மகள் செவ்வந்தியையும் தன் வாழ்வுக்கு வேண்டாதவர்களாகப் பாவித்து நடக்க வைத்தது அவனுக்குள்ளான காதல். மூவரும் ஒரே வீட்டில் வசிப்பதனால் தான் அருகில் […]

குறுநாவல் : விசாரணை

(இத்தொடர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்) அத்தியாயம் – 6 நடந்தது: தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையை வீட்டு வேலைக்காரியிடம் இருந்து ஆரம்பிக்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன். தனது விசாரணையைத் தொடர்கிறார். நடப்பது: ரெத்தினத்தை சற்றே தலை சாய்த்துக் கூர்ந்து பார்த்தார் சுகுமாரன். “நா…நா… ன் மட்டுந்தான்…” மீண்டும் சொன்னவனுக்கு முகமெல்லாம் குப்பென வியர்த்தது. “பொய் சொன்னே […]

புத்தகப் பார்வை : திண்ணை இருந்த வீடு

ஆசிரியர் : சசி எம். குமார் மதிப்புரை : கரந்தை ஜெயக்குமார் திண்ணை இருந்த வீடு இதுதாண்டா மாப்பிள்ளை எங்களுக்குக் குலசாமி. இந்த ஊருக்கு ஒண்ணுமில்லாம வந்தோம். இந்த மண்ணும், இந்த சாமியும்தான் எங்களுக்கு வழி காட்டுச்சு. பாப்பாவுக்கு ஆவணியில கல்யாணம் வச்சுருக்கிறேன். முத பத்திரிக்கையை அய்யனாருக்கு வச்சுட்டுப் போகலாம்னு வந்தேன். செல்வி அக்காவும், முருகேசன் மாமாவும் பத்திரிக்கையை வச்சு, சாமி கும்பிட்டுவிட்டு சென்ற பிறகு, அந்த கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். பெண்ணின் தாய் […]

குறுநாவல் : விசாரணை

(இத்தொடர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்) அத்தியாயம் – 5 நடந்தது: தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையை வீட்டு வேலைக்காரியிடம் இருந்து ஆரம்பிக்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன். லதா, டாக்டர் சிவராமன் என விசாரணையை நடத்திவிட்டு பாடியை போஸ்ட்மார்டத்துக்கு அனுப்பி விட்டு கிளம்புகிறார். நடப்பது: பொன்பலத்திடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வீட்டுக்குப் போய்விட்டு மதியத்துமேல்தான் போலீஸ் ஸ்டேசனுக்கு […]

கட்டுரை : ஏமாந்த சோனகிரியா நீங்கள்?!

நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு ஏமாற்றங்கள் இல்லாத வாழ்க்கையும் கிடையாது. மாற்றங்கள் இல்லாத வாழ்க்கையும் கிடையாது. மாற்றங்களின் ஊடே அவ்வப்போது ஏமாற்றங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். நினைப்பது எல்லாம் நிறைவேறிவிட்டால் அப்புறம் மனிதனை கையில் பிடிக்க முடியாதுதான். நினைப்பது நடக்காத போது ஏற்படுவது ஏமாற்றம்தான். ஆனால் கிடைப்பதை ஏற்றுக்கொண்டால் அந்த ஏமாற்றம் பெருமளவில் குறைந்து போகும். ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஏதோ ஒரு தருணத்தில் எந்த விஷயத்திலாவது ஏமாற்றப்பட்டிருப்போம். அப்போது நமது மனம் படும் வேதனையைத்தான் இந்த பதிவு அலசப்போகிறது. ஏமாறுதல் இந்த […]

புத்தகப் பார்வை : நெஞ்சில் நிறுத்துங்கள்

கட்டுரைத் தொகுப்பு – சுரதா பரிவை சே.குமார் கவிஞர் சுரதா தொகுத்த ‘நெஞ்சில் நிறுத்துங்கள்’ என்னும் புத்தகம் சகோதரர் ராஜாராம் மூலம் வாசிக்கக் கிடைத்தது. சற்றே வித்தியாசமான புத்தகம் அது. ‘தொடுப்பவன் தன் திறமையை வெளிப்படுத்துகிறான். தொகுப்பவன் பிறர் திறமையை வெளிப்படுத்துகிறான். தமிழும் தமிழிலக்கியமும் வளர வேண்டுமானால் தொடுக்கவும் வேண்டும், பிறர் கருத்துக்களைத் தொகுத்து வெளியிடவும் வேண்டும். இப்போது நான் இரண்டாவது காரியத்தைச் செய்திருக்கிறேன்’ என்று தனது உதடுகளில் – முன்னுரை- சொல்லியிருக்கிறார் சுரதா. இதில் மொத்தம் […]

குறுநாவல் : விசாரணை

(இத்தொடர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்) அத்தியாயம் – 4 நடந்தது:  தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையை வீட்டு வேலைக்காரியிடம் இருந்து ஆரம்பிக்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன். அவளிடம் விசாரிக்கும் போது இரண்டு பேரைப் பற்றி அறிந்து அவர்கள் கொலை பண்ணியிருக்கலாமா என சந்தேகிக்கிறார். நடப்பது: “சார்… ஐ ஆம் டாக்டர் சிவராமன்” “ஓ… நீங்கதானா அது..? […]

நகைச்சுவை : ஒன்பது நாள் ஒன்பது வண்ணம்

எழுத்து : மோகன் ஜி / படம் : தேவா “நாளைக்கு ஆரஞ்சு கலர்ல புடவை டீ! மறந்துடாதே!” “சரி மாமி! ஆரஞ்சுல பிங்க் பார்டர் புடவை போன வருஷம் நல்லியிலே வாங்கினேன். மேட்சிங் பிளவுஸும் பிங்க்லயே வச்சிருக்கேன்” “ என்னவோ போ! இன்னைக்கு சாம்பல் கலர்ல கட்டிகிட்டு வரச்சொன்னா, நீங்கல்லாம் வானவில் போல எல்லா கலர்லேயும் கட்டிகிட்டு வர்றீங்க! நவராத்ரில நித்தியம் ஒரு புடவை கலர் தான் சம்பிரதாயம்னா கேக்குறீங்களா?“ “நாமெல்லாம் தினம் ஒரு வீட்டில […]

குறுநாவல் : விசாரணை

(இத்தொடர்கதை திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்) அத்தியாயம் – 3 நடந்தது : தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையை வீட்டு வேலைக்காரியிடம் இருந்து ஆரம்பிக்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன். அவளிடம் விசாரிக்கும் போது இரண்டு பேரைப் பற்றி அறிந்து அவர்கள் கொலை பண்ணியிருக்கலாமா என சந்தேகிக்கிறார். நடப்பது: சுகுமாரன் ‘சிவராமன்தான் கொன்னிருக்கணும்’ எனச் சொன்னதும் லதாவின் தலை […]

சிறுவர் கதை : குளவி நண்பன்.

நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு மானூர் என்னும் அழகிய சிற்றூரில் விக்ரமன் என்னும் சிறுவன் வசித்து வந்தான். தாய் தந்தையரை இழந்த அவனுக்கு வயதான பாட்டி மட்டுமே துணை. விக்ரமன் சுறுசுறுப்பானவன். புத்திசாலி. நன்றாக உழைப்பவனும் கூட பாட்டிக்கு கூட மாட ஒத்தாசையாக இருந்து வேலைகளில் உதவி செய்வான். ஒரு நாள் அவன் தன் குடிசை வீட்டில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது குளவி ஒன்று அவனை சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தது. அது சுவற்றில் கூடு கட்ட முனைந்து கொண்டிருந்தது. எரிச்சல் அடைந்த […]

Shopping cart close