பொல்லாத மழைபெய்ய…
மோகன் ஜி சபரிமலையின் பெருவழி நடக்கையிலே பெருமழை பெய்தால், நடப்பதும் ஏறுவதும் மிகவும் கடினமாகி விடும். கெட்டிப்பட்டுப்போன பாதை இளகி வழுக்கும். பிடிமானம் இருக்காது. நாம் எவ்வளவு கவனமாக அடியெடுத்து வைத்தாலும், பக்கலிலோ முன்போ செல்பவர் வழுக்கிச் சரிந்தால், நாமும் நிலைதடுமாற வேண்டியது தான். 1976அல்லது 1977ஆம் வருடம்… அழுதை மலை ஏற்றத்தின்போது அடைமழை. அருவிபோல் பாதையில் மழைநீர் இறங்குகிறது. ஏறிச் செல்லும் ஐயப்பமார் வழுக்கலில் நிலைதடுமாறி அடுக்கிய சீட்டுக்கட்டு போல் சரிகிறார்கள். நானும் என் வயதொத்த […]