வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
—————————————————————
முந்தைய பகுதிகளை வாசிக்க
அத்தியாயம் – 1 அத்தியாயம் – 2
அத்தியாயம் – 3 அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5 அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7 அத்தியாயம் – 8
அத்தியாயம் – 9 அத்தியாயம் – 10
அத்தியாயம் – 11 அத்தியாயம் – 12
அத்தியாயம் – 13 அத்தியாயம் – 14
அத்தியாயம் – 15 அத்தியாயம் – 16
அத்தியாயம் – 17 அத்தியாயம் – 18
—————————————————————
நபிகளாரின் தனிப்பட்ட வாழ்க்கை
இத்தனை புரட்சிகளையும் செய்த நபிகளார் உடையத் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருந்ததென்றால்..
வெளியூரிலிருந்து வரக்கூடிய மக்கள் “இங்கு இருக்கக்கூடிய வர்களில் நபி யார்?” என்று கேட்பார்கள்.
அப்படிதான் அவர்கள் மக்களோடு மக்களாக தன்னை ஐக்கியப்படித்தி இருந்தார்கள். இன்றைக்கு இருப்பது போல் “இவர்கள் ஆட்சிக்குரியவர்கள், இவர்கள் மதத்தை போதிப்பவர்கள், இவர்கள் பாமர மக்கள், இவர்கள் தொழில் செய்யக்கூடியவர்கள்” என்றெல்லாம் தனித்தனி வட்டம் போட்டு வாழவில்லை.
பாமரனாக, பசி, பட்டினியோடு, அதே நேரத்தில் சிப்பாய்களாக, தளபதிகளாக, அதிகாரிகளாக, மார்க்கத்தைச் சொல்லும் அறிஞர்களாக என்று எல்லோரும் எல்லாமுமாக இருந்தார்கள். தனக்கென்று எந்த சிறப்பான சிம்மாசனமோ! தனிப்பட்ட ஆடைகளையோ! அவர்கள் அணியவில்லை.
அதுபோல “இதற்கு முன்பு வந்த நபிமார்கள் இஸ்லாத்தை எப்படி மக்களிடத்தில் கொண்டுச் சேர்த்தார்களோ! அதைப்போல நானும் ஒரு நபி, நபிமார்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்காதீர்கள்” என்று மக்களிடம் எச்சரித்தார்கள்.
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதை குர்ஆன் மறுக்கிறது. இறைவன் படைத்தப் படைப்பினிலே மனிதனை சிறந்ததாக கூறுகிறது. மனித வர்க்கத்தைப் படைத்து அப்படியே விட்டு விடாமல் அவர்கள் எப்படி வாழ வேண்டும்? எதை வணங்க வேண்டும்! என்பதையெல்லாம் எடுத்துச் சொல்வதற்கு ஒவ்வொரு கூட்டத்திற்கும், ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு மொழிக்கும், ஒருவழிகாட்டியை (தூதர்களை) அனுப்பினார்.
அந்த வகையில் முதலாவதாக மண்ணால் படைக்கப்பட்டது ஆதம் (அலை) அவர்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவில்தான் இன்றளவும் நாம் கொஞ்சமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். முதல் மனிதனே நபியாகவும், அறிவில் சிறந்தவராகவும், மற்ற உயிரினங்களை விட பலமான மனிதனாகவும் இருந்ததாக குர்ஆன் கூறுகிறது.
நபிகளாரும் கூறுகிறார்கள் “ஆதம் அலைஹிஸ்ஸலாம் கிட்டத்தட்ட 60 முழங்கள் உயரம் இருந்தார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து குறைந்து இந்த உயரத்துக்கு வந்து விட்டோம்” என்பார்கள்.
“ஆதம் நபி அவர்கள் உலகம் முழுவதும் சுற்றினார்கள்” என்கிறது குர்ஆன். எப்படி சாத்தியமானது?
அறிஞர்கள் கூறுகிறார்கள். “இன்றைக்கு உலகம் ஏழு கண்டங்களாக இருப்பவை, இதற்கு முன்பு ஒரே கண்டமாகத்தான் இருந்திருக்க வேண்டும். பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து ஏழு கண்டங்கள் ஆகிவிட்டது. இன்னும் கூட பிரிந்து கொண்டு தான் உள்ளது” என்கிறார்கள்.
ஒவ்வொரு நபிமார்களுக்கும் இறைவேதம் வழங்கப்பட்டது. அதை விளக்கிச் சொல்வதற்கு தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். அந்த வகையில்தான் உலகத்தின் கடைசி தூதராக முஹம்மது நபி அவர்கள் வந்தார்கள். அந்தப் பணியைச் “சரியாக செய்து விட வேண்டும்” என்பதில் கவனமாக இருந்தார்கள்.
மக்காவிலிருந்து மதீனா வந்த புதிதில் மிகப்பெரிய வறுமை அங்கே நிலவியது ஒரு முறை நபிகளார் வயிற்றுப் பசி தாங்க முடியாமல் சாலைக்கு வருகிறார்கள். அப்பொழுது அபூபக்கர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் அங்கே இருந்தார்கள்.
நபி அவர்கள் கேட்கிறார்கள் “ஏன் நீங்கள் இருவரும் இங்கே வந்து அமர்ந்து இருக்கிறீர்கள்?”
அதற்கு அவர்கள் இருவரும் சொன்னார்கள் “பசியினால் வெளியே வந்தோம்” என்றார்கள்.
“அல்லாஹ்வின் மீது ஆணையாக நானும் அதற்காக தான் வெளியே வந்தேன்” என்றார்கள்.
பிறகு மூவரும் ஒரு தோழரின் வீட்டிற்கு அவரை சந்திக்க போனார்கள். அங்கே இவர்களைக் கண்ட மதீனாவாசி ஆச்சரியத்துடன் அவர்களை வரவேற்று விருந்தும் வைத்தார். இரண்டு தோழர்களிடமும் நபி(ஸல்) சொன்னார்கள்.
சற்று முன் பசியோடு இருந்தோம் தற்போது இந்த உணவு கிடைத்து நம் பசி ஆறிவிட்டது இதைப்பற்றி நாளை நாம் விசாரிக்கப்படுவோம். (அந்த உணவுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். முஸ்லிம்கள் உண்ணியப்பிறகும் அருந்திய பிறகும் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுவார்கள்.) என்றார்கள்.
இது வறுமையான காலகட்டத்தில் நடந்தது. ஆனால் அரசு கருவூலம் நிறைந்து இருந்த பிற்காலகட்டத்திலும் அவர்கள் அப்படியே தான் வாழ்ந்தார்கள்.
ஒருமுறை நபியவர்களின் மனைவிமார்கள் முறையிட்டார்கள்,
“அரசு கருவூலத்தில் பொருளாதாரம் நிறைந்து உள்ளது. ஆகவே பிறருக்கு மானியம் கொடுப்பது போல எங்களுக்கும் நீங்கள் தர வேண்டும்” என்று கேட்டார்கள்.
எல்லா நாட்டு அரசு கருவூலங்களும் அன்னாட்டு அரசர்களுக்குச் சொந்தம். தன்னை புகழ்ந்து பேசும் புலவர்களுக்கும், தனக்கு பிடித்த நபர்களுக்கும் விரும்பியவாறு அள்ளி அள்ளி கொடுப்பார்கள். கருவூலம் என்றாலே அந்தப்புர சிலவினங்களுக்கு தான். மன்னர்களின் மனைவிமார்களுக்கு ஆபரணங்கள் அங்கிருந்துதான் வரும்.
அப்படி மிகப்பெரிய அரபு சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக நபியவர்கள் இருந்தார்கள். கருவூலம் நிறைந்து இருந்த நிலையில் தான் மனைவிமார்கள் அப்படி கேட்டார்கள். ஆனால் நபியவர்களோ இரண்டு வாய்ப்பு கொடுத்து ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள்.
நன்றி : படம் (ஆசிரியரின் தேர்வு) இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்.