Galaxy Books

வாழ்வும்-வாசிப்பும் – சசி.S.குமார்

“நீர்க்கோல வாழ்வை நச்சி…” என்று கம்பன் எழுதிய வார்த்தைகள் வாழ்வின் நிலையாமையைச் சொல்லும். சின்னஞ்சிறிய வாழ்க்கை. சாசனம் எழுதித்தந்து நூறாண்டு வாழ்ந்தாலும், வாழ்நாட்கள் சற்று ஏறக்குறைய வெறும் 36,500 நாட்கள் தான். கல்பகோடி ஆண்டுகள் வாழ்கிற, வாழப்போகிற பேருலகில்…நமது வாழ்நாள் வெறும் 36,500 நாட்கள் தான். இதற்குள் தான் அத்தனை ஆரவாரம். அத்தனை அலட்டல். அத்தனை அழிச்சாட்டியம். அத்தனை அலட்சியம். இத்தனைக்கும் நூறாண்டு வாழ்வோம் என்பதற்கு எந்தவித உறுதியும் யாரும் தரவும் இல்லை. Trial & error […]

வாசிப்பு என்ன செய்யும்? – பேச்சாளர் ஹேமலதா

நான் மிகச்சிறந்த வாசிப்பாளரில்லை. சமீப வருடங்களில்தான் என் வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திருக்கிறேன். காலம் நம் மேல் வீசும் கற்களிலிருந்து தப்பித்துக்கொள்ள, புரிந்து கொள்ளவே இயலாத இவ்வாழ்வைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வாசிப்பு பழக்கம் பேருதவியாக இருக்கலாம். ஒரு சரியான புத்தகத்தின் முன்னிலையில் நாம் ஒரு காலி பாத்திரமாக நம்மை மாற்றிக்கொள்ள மெல்ல நம்மை நிரப்பிக்கொள்ளலாம். நம்மை நாமே காலி செய்வதும் நிரப்பிக் கொள்வதும் தொடர் நிகழ்வுகளாக நடக்கும் வாசிப்பினூடே. புத்தகங்கள் தரும் அறிவு வாழ்வு தரும் அனுபவத்தோடு இணை […]

வாழ்க்கைக்கு போதாது – களந்தை. பீர் முஹம்மது

புத்தகங்களைப் பிடிக்கும் கைகள் நறுமணம் மிக்கவை! புத்தகங்களை வாசிக்கும் கண்கள் ஒளிமிக்கவை! புத்தகங்களை உள்வாங்கும் இதயம் கனிகளின் தோட்டம்! நம் அறிவின் சுடரை ஏற்றுவன இந்தப் புத்தகங்களே! நாம் வாழுகின்ற இந்த ஒரேயொரு வாழ்க்கை நமக்குப் போதுமானதன்று.வாழ்க்கை சோலையாகவும் பெருங்கடலாகவும் விரிந்திருக்கின்றது. அவ்வாழ்வைப் பன்முகமாக வாழவும், நீந்திக் கடக்கவுமான வழிகாட்டிகள் நம் கையில் தவழப் போகும் நூற்களே! -களந்தை.பீர் முஹம்மது

தன் நிலை உணர – லதா

வாசிப்பு தன் நிலை உணர வைக்கும், சக மனிதர்களை புரிய வைக்கும், மனதை விசாலமாக்கும், இவ்வுலகையே தன்னுள் காண வைக்கும், மொத்தத்தில் நம்மை “வாழ” வைக்கும். வாசிப்பிற்கு இணையான ஒரு தோழனை நான் இதுவரை கண்டதில்லை…. எனதொரு வாழ்வில் பலர் வாழ்வை, கண்டு, உரையாடி, உணர்ந்து, பார்வை விசாலமாகி, மனது பக்குவமாகி என என் ஒவ்வொரு புரிதலிலும் உடன் நின்றது, நிற்பது புத்தகங்களே! -எழுத்தாளர் லதா

ஏன் வாசிக்க வேண்டும்? – பரிவை.சே.குமார்

வாசிப்பு ஒரு போதை, அதை அனுபவித்தவர்கள் அதிலிருந்து அவ்வளவு சீக்கிரமாக வெளிவர மாட்டார்கள். தீவிர வாசிப்பைத் தொடர்வதுடன் தேடலையும் விரிவுபடுத்துவார்கள். வாசிப்பு நல்ல எண்ணத்தையும் நற்சிந்தனையையும் கொடுக்கும். வாசிக்க வாசிக்க அதன் வாசனையை உணர ஆரம்பிக்கலாம். தொடரந்து வாசிப்போம்.. வாசிப்பு ஒரு போதை, அதை அனுபவித்தவர்கள் அதிலிருந்து அவ்வளவு சீக்கிரமாக வெளிவர மாட்டார்கள். தீவிர வாசிப்பைத் தொடர்வதுடன் தேடலையும் விரிவுபடுத்துவார்கள். வாசிப்பு நல்ல எண்ணத்தையும் நற்சிந்தனையையும் கொடுக்கும். வாசிக்க வாசிக்க அதன் வாசனையை உணர ஆரம்பிக்கலாம். தொடரந்து […]

மனத்திற்கான புத்துணர்வு – தெரிசை. சிவா

உழன்று சுழலும் இயந்திர வாழ்க்கையில் உடலுக்கான புத்துணர்வு உடற்பயிற்சியால் கிடைப்பதைப்போல், மனத்திற்கான புத்துணர்வு புத்தக வாசிப்பால் மட்டுமே வசப்படும்.  “வாசிப்பு” மனதை இலகுவாக்குவதோடு, வாழ்வில் எதிர்வரும் பிரச்சனைகளைப்  பற்றிய விசாலமானப் பார்வையை வாசகனுக்கு கடத்துகிறது.  ஒரு நல்ல புத்தகம் ஆயிரம் நல்ல நண்பர்களுக்கு ஈடானது என்கிறார்கள்.  வரலாற்றில் சாதித்த அனைத்து மனிதர்களுக்கும் புத்தகம் ஒரு நல்ல நண்பனாக இருந்திருக்கிறது.  ஒருமித்த சிந்தனை, தார்மீக எண்ணங்கள், தனிமனித  புரட்சி உட்பட்ட அனைத்து அகண்ட உணர்வுகளும் வாசிப்பதால் வலுப்பெறுவதை நம்மால் உணர முடியும்.  வாசிப்பின் மற்றுமொரு அதிசயம் அது தனிமனிதனின் பகுப்பாய்வு சிந்தனையை அதிசயக்க வகையில் உயர்த்துகிறது […]

Muthukrishnan

புத்தகம் – அ.முத்துக்கிருஷ்ணன்

சலங்கை கட்டிய கால்களைப் போல, அரிதாரம் பூசிய கலைஞரைப் போல, வாசிப்பின் நெடியேறியவர்களால் புத்தகங்களை ஒருபோதும் கைவிட முடியாது. புத்தகம்தான் இந்த உலகின் பெரும் ரசவாதி.

உள்ளீடு – செயல்முறை – வெளியீடு (Input – Process – Output) – மருத்துவர் சென் பாலன்

இந்த மூன்று செயல்பாடுகளும் உலகின் அறிவார்ந்த அசைவுகள் அனைத்துக்கும் அடிப்படையாக அமைகின்றன. ஓர் ஆராய்ச்சி என எடுத்துக்கொண்டால் தரவுகளை சேகரித்து உள்ளீடாகக் கொடுத்து, அதை process செய்து, ஆராய்ந்து, செயலாக்கப்பட்ட தரவுகளாக்கி அதிலிருந்து முடிவுகளை வெளியீடாக எட்டுவதில் அந்த ஆராய்ச்சியின் வெற்றி உள்ளது. ஆராய்ச்சி என்றவுடன் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி அளவிற்கு செல்ல வேண்டாம். சமையலுக்கு அரைக்கிலோ புளி வாங்க வேண்டுமென்றால் கூட எந்தக்கடையில் தரமாக இருக்கும், எங்கு விலை குறைவாக இருக்கும் போன்ற […]

வாசிப்பு 

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் (இலங்கை) வாசிப்பு ஒருவரை முழுமையடையச் செய்கின்றது. ”கண்டது கற்கப் பண்டிதனாவான்” என்பது முதுமொழி. ஆனால் எதனைக் கற்கவேண்டும் என்பதற்கு ஒரு வரன்முறை வேண்டும். அதற்கான வழிமுறையை நமக்கு வள்ளுவனார் வரையறை செய்துள்ளார். கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. என்னுங் குறட்பாவில் ”கற்பவை” என்னும் சீரில் அதனைச் சுருங்கக் கூறியுள்ளார். படிக்கப்படிக்க நாம் படிக்காதவை புரியும். மேலும் படிக்கத் தூண்டும். மொழி வாலாயமாகும். வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களே பிற்காலத்தில் அறிஞர்களாகவும், […]

Shopping cart close