வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
——————————————————————————————
முந்தைய பகுதிகளை வாசிக்க
அத்தியாயம் – 1 அத்தியாயம் – 2 அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4 அத்தியாயம் – 5 அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7 அத்தியாயம் – 8 அத்தியாயம் – 9
அத்தியாயம் – 10 அத்தியாயம் – 11 அத்தியாயம் – 12
அத்தியாயம் – 13 அத்தியாயம் – 14 அத்தியாயம் – 15
அத்தியாயம் – 16 அத்தியாயம் – 17 அத்தியாயம் – 18
அத்தியாயம் – 19 அத்தியாயம் – 20 அத்தியாயம் – 21
அத்தியாயம் – 22 அத்தியாயம் – 23 அத்தியாயம் – 24
——————————————————————————————
நான்காவது கலீஃபா
அதற்குப் பிறகு செய்தி அறிந்து ஓடி வந்தார்கள் தோழர்கள். இப்போது மதினா நகரம் புரட்சியாளர்களின் பிடியில் போய் விட்டது. நபித்தோழர்கள் ஒன்று கூடி உடனடியாக இதற்குத் தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் மதினாவை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்ற சிந்தனையோடு உடனடியாக அலி (ரலி) அவர்களை நான்காவது கலிபாவாக தேர்ந்தெடுத்தார்கள்.
முள்ளின் மீது அமர வைக்கப்பட்டார்கள் அலி (ரலி) அவர்கள். மதீனா நகரமே தற்போது சீர்குலைத்து நிற்கிறது அதை சரி செய்து மீண்டும் பழைய ஆட்சியை நிலைநிறுத்த சிலகாலம் ஆகும். இந்த சூழ்நிலையில் மக்காவில் இருந்த நபியவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு படையை திரட்டிக்கொண்டு இருந்தார்கள்.
இன்னொறு புறம் ஷாம் பகுதியில் ஆளுநர் முஆவியா (ரலி) அவர்களும் படையைத் திரட்டினார்கள். முஆவியா அவர்கள் கொல்லப்பட்ட கலீஃபாவின் ஒன்று விட்ட சகோதரர்.
இப்படி பட்ட சூழலில் உடனடியாக அலி (ரலி) அவர்கள் மதீனாவை விட்டு இன்றைய ஈராக்கில் இருக்கக்கூடிய கூஃபாவிற்கு தலைநகரை மாற்றினார்கள். இது நடந்து கொண்டிருந்த போதே ஆயிஷா (ரலி) அவர்களும் படையோடு வந்து நின்றார்கள்.
இரண்டு தரப்பிலிருந்தும் பேச்சு வார்த்தை நடைப்பெற்றது. “எங்களிடம் குற்றவாளிகளை ஒப்படையுங்கள்” என்று ஆயிஷா ரலி அவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
“இப்போது தான் பொறுப்பேற்று உள்ளேன் கூடிய விரைவில் நானே அவர்களுக்கு தண்டனை வழங்கி விடுவேன் அது வரை அமைதியாக இருங்கள்” என்று அலி ரலி அவர்கள் பதில் கூறினார்கள்.
அமைதியாகத்தான் பேச்சி வார்த்தை போய்க்கொண்டு இருந்தது. இருவரும் சமாதானம் ஆகிவிடுவார்கள் என்று பயந்த சிலர் திடீரென்று ஒரு நாள் போரை ஆரம்பித்து விட்டார்கள்.
பொதுவாக மக்கா அரபிகள் எதிரியாக இருந்தாலும், போர் என்றாலும் கூட நியாயமாக நடந்து கொள்வார்கள் ஒப்பந்தம் போட்டு விட்டால் மீற மாட்டார்கள். ஆனால் ‘போர் இல்லை’ என்று முடிவான பின் இதை ஆரம்பித்து விட்டார்கள். ஆகவே அதை மக்காவாசிகள் செய்துருக்க மாட்டார்கள்.
யார் ஆரம்பித்தது என்று தெரியாத நிலையில் போர் உக்கிரமாக நடந்தது. மக்காவிலிருந்து வந்த படைக்கு நபிகளார் கூறிய அந்த 10 பேர்களில் இருவர் ஜுபைர் ரலி அவர்களும் தல்ஹா ரலி அவர்களும் தலைமை ஏற்று இருந்தார்கள்.
போர் ஆரம்பித்த உடனேயே ஜுபைர் ரலி அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் வெட்டிக் கொன்று விட்டார்கள். தல்ஹா ரலி அவர்கள் போரில் மரணம் அடைந்தார்கள். மீதமிறுப்பது ஆயிஷா நாயகி மட்டும்.
அவர்களை பத்திரமாக மீட்பது அலி ரலி அவர்களுக்கு கடமை. காரணம் அவர்கள் உம்முல் மூமினீன் என்று சொல்லக்கூடிய ஒட்டு மொத்த முஸ்லிம்களின் தாய். அவர்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அரபு உலகமே கொந்தளித்து விடும். ஆகவே அவர்களை ஒட்டகத்தின் காலை வெட்டி பத்திரமாக அவர்களை மீட்டு அவர்கள் தம்பியையே பாதுகாப்பாக நிறுத்தினார்கள்.
பிறகு இருவரும் சமரசமாகி அந்த படைகள் திரும்பிச் சென்றது.
இந்தச் சண்டை முடிந்ததும் முஆவியா ரலி அவர்கள் படையோடு வந்து விட்டார்கள். அவர்களோடும் முதலில் சண்டை பிறகு சமாதானப் பேச்சு வார்த்தை என்று முடிந்தது.
ஆனால் இந்த பேச்சு வார்த்தையை கலீஃபாவுடன் வந்த சிலர் விரும்பவில்லை அவர்கள் “போர் தான் வேண்டும்” என்று நின்றார்கள். வேறு வழி இன்றி கலீஃபா கட்டளையிட்டதைத் தொடர்ந்து படைகள் திரும்பிச் சென்றது.
இதன் மூலம் போதுமான பலம் நான்காவது கலிபாவிற்கு திரும்பக் கிடைத்தது. இப்போது நாட்டை வளப்படுத்த வேண்டும். பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். ஆகவே நிறைய சட்ட திட்டங்களை வகுத்ததோடு குற்றவாளிகளுக்கு தண்டனைகளையும் வழங்க ஆரம்பித்தார்கள்.
அந்தப் போர்களிலே கலந்து கொண்ட அப்துல்லா இப்னு சபா என்பவர் இந்த கூட்டங்களுக்கு மிக முக்கியமானவராக இருந்தார். அவர் ஒரு குழப்பத்தை நிறையவே செய்து கொண்டிருந்தார். அதிலே கலீபா அவர்களை கடவுளுக்கு நிகராகவும் புகழ ஆரம்பித்தார் ஆகவே கலீஃபா அலி ரலி அவர்கள் அப்துல்லாஹ் இப்னு சபா மற்றும் அவரின் தோழர்களுக்கு மரண தண்டனை விதித்தார்கள்.
அதேபோல கடுமையான குணம் கொண்ட போர்களை அதிகம் விரும்பும் மக்களாக சிலர் இருந்தார்கள். அவர்கள் தான் ஆயிஷா நாயகியோடு நடந்த போரையும் முஆவியா ரலி அவர்களோடு நடந்த போரையும் விரும்பியவர்கள். ஆரம்பத்தில் அலி ரலி அவர்களின் கூட இருந்தவர்கள் பிறகு பிரிந்து விட்டார்கள்.
அவர்கள் நஹ்ரவான் என்ற பகுதியில் தனியாகவே ஆட்சி அமைப்பது போல் இருந்தது. அவர்கள் காருஜியாக்கள் என்று அழைக்கப்பட்டார்கள். எதற்கெடுத்தாலும் வாளைத் தூக்கி கொலை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். மக்கள் அவர்களை கண்டு அச்சம் கொள்ள ஆரம்பித்தார்கள். அதைப் பற்றி மக்கள் கலீஃபா விடம் முறையிட்டார்கள்.
இவர்களை அப்படியே விட்டு விடக்கூடாது என்று எண்ணிய கலீஃபா அவர்கள் “அவர்களை ஒடுக்க வேண்டும்” என்று அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்தினார்கள். அந்த தாக்குதலில் தப்பித்த சிலர் கலீஃபா அவர்களை கொலை செய்ய திட்டமிட்டார்கள்.
இந்த கூட்டம் தான் அலி ரலி அவர்களை முன்னிலைப்படுத்தி உஸ்மான் ரலி அவர்களை கொலை செய்தது. தற்போது அலி ரலி அவர்களையும் கொலை செய்ய திட்டம் தீட்டியது.
ஹிஜ்ரி 40 ஆவது ஆண்டு அன்று காலை பஜ்ருடைய தொழுகைக்கு வீட்டிலிருந்து பள்ளிவாசலை நோக்கி சென்றவர்களை காரிஜியாக்களால் நியமிக்கப்பட்ட ஒருவன் வாலில் விஷம் தடவி அதை கொண்டு கலீஃபா அவர்களின் தலையிலே தாக்கினான். விஷம் தடவி இருந்த காரணத்தால் கலீபா அலி (ரலி )அவர்கள் அடுத்த இரண்டு நாட்களில் மரணித்து விட்டார்கள்.
நபிகளார் கூறியிருந்தார்கள் “வஹியின் அடிப்படையில் ஆட்சி 40 ஆண்டுகள் இருக்கும்” என்றார்கள் ஆகவே தான் இந்த நான்கு கலீஃபாக்களையும் ராஷிதுன்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். யாரால் கொல்லப்பட்டார் என்று அனைவருக்கும் தெரிந்து விட்டதால் பெரும் குழப்பம் ஒன்றும் ஏற்படவில்லை. அவர்கள் கூஃபாவிலேயே அடக்கம் செய்யப்பட்டார்கள்.
நன்றி : படம் (ஆசிரியரின் தேர்வு) இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்.