வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
——————————————————————————————
முந்தைய பகுதிகளை வாசிக்க
அத்தியாயம் – 1 அத்தியாயம் – 2 அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4 அத்தியாயம் – 5 அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7 அத்தியாயம் – 8 அத்தியாயம் – 9
அத்தியாயம் – 10 அத்தியாயம் – 11 அத்தியாயம் – 12
அத்தியாயம் – 13 அத்தியாயம் – 14 அத்தியாயம் – 15
அத்தியாயம் – 16 அத்தியாயம் – 17 அத்தியாயம் – 18
அத்தியாயம் – 19 அத்தியாயம் – 20 அத்தியாயம் – 21
அத்தியாயம் – 22 அத்தியாயம் – 23 அத்தியாயம் – 24
அத்தியாயம் – 25 அத்தியாயம் – 26
——————————————————————————————
மூன்று நாட்கள் இதே சூழ்நிலையில் இருந்தது பிறகுதான் சண்டை ஆரம்பித்தது. அவர்களின் கூடாரங்கள் எரிக்கப்பட்டன, அதில் இருந்த குடும்பத்தார்கள் இறந்து போனார்கள்.
இறுதியாக ஹுசைன் ரலி அவர்களும் கொல்லப்பட்டார்கள். ஹுசைன் ரலி அவர்களின் குடும்பத்தில் மகன் ஜைனுல் ஆப்தீன் ஒருவர் மட்டும் தான் உயிர் பிழைத்தார்.
மதினாவிலே எல்லை மீறியவர்கள் இங்கும் எல்லை மீறி தான் இருப்பார்கள். இந்த செய்தி யஜீதிடம் சென்ற போது அவர் அந்த படையை சபித்தார் “நானாக இருந்தால் மன்னித்து தானே இருப்பேன்” என்று கடிந்து கொண்டார்.
அதற்குள் எல்லாமே முடிந்து விட்டதே. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த தண்டனையும் கலீபா வழங்காதது தான் அவர் மீது இருக்கும் பெரும் குற்றச்சாட்டு. மேலும் ஹசன் ரலி அவர்களின் மகன் மற்றும் சொந்தங்கள் யஜீதை சந்தித்த பொழுது ஏராளமான பொருட்களை கொடுத்து வழி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
மூன்றாவதாக அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் அவர்களுக்கு எதிராக நடந்த போர். நபிகளார் கூறிய 10 பேரில் ஒருவராக இருந்த ஜுபைர் ரலி அவர்களின் மகன் அப்துல்லாஹ் மக்காவின் கலீஃபாவாக முடி சூட்டிக்கொண்டார்.
மிகச்சிறந்த மார்க்க அறிஞராக இருந்தவர், மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்து போன பிறகு பிறந்த முதல் குழந்தை, ஆயிஷா ரலி அவர்களின் அக்கா மகன், மேலும் நபிகளார் பெயர் சூட்டிய குழந்தை என்று பல சிறப்புகளை கொண்டிருந்தார்கள் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரலி அவர்கள்.
வலீத் பின் உத்பா என்பவர் மதீனாவின் ஆளுநராக இருந்தார் மேலும் மர்வான் பின் ஹக்கம் என்பவர் முக்கிய பொறுப்பு வகித்தார் காரணம் அவர் யஜீதுடைய நெருங்கிய உறவுக்காரர்.
ஹிஜ்ரி 64ல் கலீஃபா யஜீத் பின் முஆவியாவின் படை மக்காவை முற்றுகை இடுகிறது. உள்ளிருந்து அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் அவர்களின் படையும் சண்டையிடுகிறது.
இந்தச் சண்டையில் புனித பள்ளியின் ஹஜருல் அஸ்வத் என்று சொல்லக்கூடிய கருப்பு கல் மூன்றாக உடைந்து விடுகிறது. இந்த சண்டை உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் பொழுது படையினருக்கு “கலீஃபா யஜீத் மரணித்து விட்டார்” என்று செய்தி வருகிறது. உடனடியாக போர் நிறுத்தப்பட்டு படைகள் திரும்பிச் சென்று விடுகிறது.
கலிஃபா இறந்ததும் அவசர அவசரமாக அவரது சிரிய வயது மகன் உடல் நலம் குன்றிய நிலையில் கலீஃபாவாக நியமிக்கப்படுகிறார்.
இந்நிலையில் மக்காவில் இருக்கும் மருவான் பின் ஹக்கம் அவர்கள் சிரியாவிற்கு செல்கிறார்கள். உடல் நலம் சரியில்லாமல் இருந்த சிறுவனும் இறந்து விட ஏதேச்சையாக அங்கு சென்ற மர்வான் பின் ஹக்கமுக்கு முடி சூட்டப்படுகிறது.
முஆவியா ரலி அவர்களின் வாரிசுகளின் தொடர் முடிந்து விட்டது. முஆவியா ரலி எப்படி உஸ்மான் ரலியின் ஒன்றுவிட்ட சகோதரரோ அதைப் போல மர்வானும் உஸ்மான் ரலியின் ஒன்றுவிட்ட சகோதரர் தான். ஓராண்டு காலம் இவரின் தற்காலிக ஆட்சி நீடித்தது.
ஹிஜாசை(சவூதி )அப்துல்லா இப்னு ஜீபைர் ஆட்சி செய்கிறார்கள். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள்.
ஓராண்டு ஆட்சிக்குப் பிறகு மருவான் இயற்கை எய்துகிறார். அதைத் தொடர்ந்து மருவானின் மகன் அப்துல் மலீக் இப்னு மர்வான் பதவி ஏற்கிறார்.
இடைக்காலங்களில் சரியான கலீபா இல்லாமல் தத்தளித்த அரபு உலகை மீண்டும் ஒன்றிணைக்கும் பணியை செய்கிறார் அப்துல் மலீக். பிரிந்திருக்க கூடிய ஆட்சியை ஒன்றிணைக்க முயன்று மீண்டும் ஒரு பெரும் படையை மக்காவை நோக்கி அனுப்புகிறார்.
படைகள் மக்காவை ஆறு மாத காலங்கள் முற்றுகையிடுகிறது இம்முறை நடந்த சண்டையில் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரலி அவர்கள் கொல்லப்படுகிறார்கள்.
அதேபோல் பல பகுதிகளில் நடந்த கிளர்ச்சிகளை ஒடுக்கி மீண்டும் ஒரே ஆட்சியின் கீழ் நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறது.
அப்துல் மலிக்கினுடைய மகன் வலீத் அதற்குப் பிறகு வலீதுடைய மகன்கள் இடையில் அப்துல் மலீக்கின் சகோதரன் மகன் உமர் இப்னு அப்துல் அஜீஸ் என்று கிட்டத்தட்ட 91 ஆண்டு காலங்கள் உமையாக்களின் ஆட்சி நீடிக்கிறது.
*****
இப்படி ஆட்சிக்காக ஒருத்தரோட ஒருத்தர் போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும் உலகின் பெரும்பாலான இடங்களை இஸ்லாமிய படைகள் வென்று கொண்டே சென்றது. ஆப்பிரிக்காவின் இறுதியில் சென்றவர்களுக்கு கடல் குறுக்கே நின்றது.
அப்துல் மலீக் ஆட்சி மிகவும் பலம் வாய்ந்து இருந்தது. கிட்டதட்ட இருபது ஆண்டுகள் அவருடைய ஆட்சி இருந்தது. அன்றைய உலகின் மிகப்பெரிய அரசாங்கமாக இஸ்லாமிய அரசாங்கம் இருந்தது. அவர்களின் ஆட்சி ஆசியா,ஆப்பிரிக்கா, ஐரோப்பாவிற்குள்ளும் சென்று விட்டது. மேலும் உலகின் நான்கு புறங்களிலும் படைகள் கோலோச்சியது.
அன்றைய உலகை ஒவ்வொரு பகுதியாக பிரித்து பிரித்து சிற்றரசர்கள் ஆட்சி செய்தார்கள். அதில் பல அரசர்கள் மக்களுக்கு துயரத்தை தான் தந்தார்கள்.
அதேபோல் தற்போதைய ஸ்பெயினை பல சிற்றரசர்கள் ஆட்சி செய்தார்கள். மக்களுக்கு பல்வேறு விதமான துன்பங்களை சுமத்திக் கொண்டிருந்தார்கள். அதில் பாதிக்கப்பட்ட சிலர் மொரோக்கோவில் ஆட்சியில் இருந்த அரேபியர்களிடம் உதவி கேட்டார்கள்.
அதைத்தொடர்ந்து கடல் மார்க்கமாக தாரிக் பின் ஸியாத் என்ற தளபதியின் தலைமமையில் படைகள் ஸ்பெய்னுகுள்ளேயும் போனது. இன்றும் தாரிக் பின் ஜியாது மலை என்று உள்ளது. அதை ஜிப்ரால்டர் மலைத்தொடர் என்று சொல்வார்கள்.
அவரைப் பற்றி கூடுதலாகவும் எழுதி வைத்திருக்கிறார்கள். இங்கிருந்து கரைக்குச்சென்றதும் படகுகளை அவர் எரித்துவிட்டார். “போனால் வெற்றியோடு போகவேண்டும் இல்லை என்றால் வீர மரணம்” என்று கூறினார் என்ற செய்தியும் உண்டு.
ஸ்பெயினுக்குள் சென்று அங்கே மிகச் சிறந்த ஆட்சியை வழங்கினார்கள். மேலும் படைகள் அங்கிருந்து மற்ற ஐரோப்பிய பகுதிகளுக்குள் செல்வதற்கு பலமுறை முயற்சி செய்தார்கள். அது அவ்வளவு சுலபமாக இல்லை.
ஒட்டு மொத்த ரோம படைகளும் எதிர்த்து நின்றது. ஆகவே கூடுதல் படை தேவைப்பட்டது. சிரியாவில் இருந்த கலிஃபாவிற்கு கடிதம் எழுதி உதவி கேட்டு இருந்தார்கள். அப்போது உமையா கலீஃபத்தின் கடைசி வாரிசுகள் ஆட்சி செய்தார்கள். அவர்களும் உடனடியாக பெறும் படையைத் தயார் செய்து அனுப்பி வைத்தார்கள். படைகள் ஸ்பெயினை நோக்கிச் சென்றன.
கிளம்பிய உதவிப் படைகள் கடைசிவரை அவர்களிடம் வந்து சேரவில்லை. ஒருவேளை அந்த படைகள் ஸ்பைனுக்குள் வந்திருந்தால் உலக சரித்திரம் வேறு விதமாக மாற்றி அமைக்கப்பட்டு இருக்கும். உலகின் பல நாடுகளில் சுதந்திரப் போர்கள் நடந்தே இருக்காது. ஏன் இந்தியாவில் கூட சுதந்திரப் போர் என்ற ஒன்று நடந்திருக்காது.
நன்றி : படம் (ஆசிரியரின் தேர்வு) இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்.