வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
—————————————————————————————————-
முந்தைய பகுதிகளை வாசிக்க
——————————————–
அத்தியாயம் – 1 அத்தியாயம் – 2 அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4 அத்தியாயம் – 5 அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7 அத்தியாயம் – 8 அத்தியாயம் – 9
அத்தியாயம் – 10 அத்தியாயம் – 11 அத்தியாயம் – 12
அத்தியாயம் – 13 அத்தியாயம் – 14 அத்தியாயம் – 15
அத்தியாயம் – 16 அத்தியாயம் – 17 அத்தியாயம் – 18
அத்தியாயம் – 19 அத்தியாயம் – 20 அத்தியாயம் – 21
அத்தியாயம் – 22 அத்தியாயம் – 23 அத்தியாயம் – 24
அத்தியாயம் – 25 அத்தியாயம் – 26 அத்தியாயம் – 27
அத்தியாயம் – 28
—————————————————————————————————-
நபிகளார் ஒருமுறை தன் மகள் பாத்திமாவையும் தந்தையின் கூடப்பிறந்த சகோதரியையும் கூப்பிட்டு…
“உங்கள் பங்கிற்கு ஒரு பேரீச்சம் பழத்தின் ஒரு பகுதியை யாவது தானம் கொடுத்து உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்றார்கள்.
அதாவது நபிகளாருடைய குடும்பம் என்பதற்காக இறைவனிடத்திலே நீங்கள் இலகுவாக சொர்க்கம் சென்று விடலாம் என்று நினைக்காதீர்கள் என்றார்கள்.
குர்ஆனிலே பல இடங்களில் பல நபிமார்களின் குடும்பத்தில் உள்ள மனைவி பிள்ளைகளே எதிரியாக இருந்தார்கள். அவர்கள் எல்லாம் உங்களது குடும்பம் இல்லை என்பதை குர்ஆன் கூறுகிறது. மனிதர்களில் சிறந்தவர்களாக நபிமார்களின் குடும்பத்தவர்கள் இருந்தாலும் இறைவனிடத்தில் அனைவரும் சமமே.
ஆனால் ஷியாக்களோ நபிகளாரின் குடும்பத்தினர் குறிப்பிட்ட சிலரை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவர்களை ஏற்றுக் கொள்ளாமல் ஒரு கொள்கையை கொண்டிருந்தார்கள்.
அதுமட்டுமல்ல மூசா நபி அவர்கள் ஃபிரவுனிடம் இருந்து காப்பாற்றப்பட்ட முஹரம் 10 அன்று இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாளாக நோன்பு வைக்கச் சொன்னார்கள். ஆனால் இவர்களோ ஹுசைன் ரலி அவர்கள் கொல்லப்பட்ட துக்க நாளாக அன்றைய நாளை மாற்றிக் கொண்டார்கள். அந்த நாளில் பஞ்சா எனும் ஒரு கிரியைச் செய்வார்கள் அது முற்றிலும் நபிகளார் அவர்களால் தடை செய்யப்பட்டிருந்தது.
நெருப்பைக் கொட்டி தீமிதிப்பதும் உடலெல்லாம் கத்திகளால் கீறிக் கொண்டு ஓலமிடுவதும் என்று இஸ்லாம் தடை செய்த காரியங்களைச் செய்வதோடு உலகம் முழுவதும் இறந்தவர்கள் புதைக்கப்பட்ட பிறகு அந்த இடத்தில் தர்கா எனும் புதிய கொள்கையை இவர்கள் தான் அறிமுகப்படுத்தியது.
இப்படி நபிகளார் காட்டித் தந்த வழிமுறைகளுக்கு எதிராக இவர்கள் நடந்து கொள்வதாலேயே இன்றளவும் உலகத்தில் சன்னி ஷியா எதிரும் புதிராகவும் இருக்கிறார்கள். அதுவே மேலை நாடுகளுக்கு உதவியாகவும் இருக்கிறது. அவர்கள் இப்போது சிரியா, ஏமன், ஈரான் போன்ற நாடுகளை ஆட்சி செய்கிறார்கள்.
இப்படி பல கொள்கை குழப்பங்களுடன் கூட்டம் கூட்டமாக கிளம்பியதும் அவர்களை அடக்க முடியாமல் அப்பாஸியாக்கள் தடுமாறிய இந்த காலகட்டத்தில் தான் மங்கோலிய அரசன் செங்கிஸ்கான் அரபு உலகத்தின் மீது படை எடுத்தான்.
அப்பாசியாக்கள் தங்கள் ஆட்சி பகுதியை மத்திய ஆசியாவில்(பாரசீகம்)மட்டுமே நிறுத்திக் கொண்டார்கள். சவுதி, எகிப்து, சிரியா போன்ற பகுதிகளை சிற்றரசர்கள் ஆட்சி செய்தார்கள் இது செங்கிஸ்கானுக்கு மிகவும் இலகுவாக இருந்தது அரபு உலகை தாக்குவதற்கு.
செங்கிஸ்கான்
ஈரான்,ஆப்கான்,சீனா, ரஷ்யா இந்த நாடுகளின் இடைப்பட்ட பகுதியிலே சில கூட்டங்கள் இருக்கிறது. இன்றைக்கு மங்கோலியா, கஜகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் என்று நாடுகள் உள்ளன அன்றைக்கு இவைகள் அனைத்தும் இனக்குழுக்களாக இருந்தது மங்கோல், துர்க், உஸ்பெக் என்று.
இந்த இனக்குழுக்கள் எப்பொழுதுமே ஒருவரை ஒருவர் சண்டைப் போட்டுக் கொள்ளும் மக்களாக இருந்தார்கள். இவர்களால் தான் சீனாவே பெருஞ்சுவரை எழுப்பியது.
இதில் மங்கோல் இனத்தில் தோன்றிய பலம் வாய்ந்த தலைவன் ஒருவன் தான் செங்கிஸ்கான். இந்த இனங்களுக்கு எந்த கொள்கையுமே கிடையாது. சண்டையிடுவதும், கொள்ளையடிப்பதையும், எதிர்ப்பவர்களை கொன்று குவிப்பதைத் தவிர.
ஒரு கட்டத்தில் செங்கிஸ்கானின் கைகள் ஓங்கி, துருக் இனத்தவர்கள் தனது பகுதியில் இருந்து தப்பி இன்றைய துருக்கி என்று அழைக்கப்படும் பகுதிக்குள் குடியேறினார்கள்.
அதேபோல மாவீரர்களாக இருக்கக்கூடிய இந்த துர்கு இனத்தவர்களை அப்பாஸியா கலீஃபாக்கள் தங்கள் படைகளில் இணைத்துக் கொண்டு போர்வீரர்களாக மாற்றி விடுகிறார்கள். இங்கிருந்து தான் மங்கோலும் துர்க்கும் (முகலாயர்கள், துலுக்கன்) உலகம் முழுவதும் பரவுகிறார்கள்.
ஆரம்பத்தில் அப்பாசிய கலீஃபாக்களோடு நல்லுறவை வைத்திருந்த செங்கிஸ்கான் இந்தியாவிற்குள் செல்வதற்கு தான் முயற்சித்தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வரலாற்றிலே செங்கிஸ்கான் என்று குறிப்பிடப்படுகிறவர் ஒரு அரசன் மட்டுமில்லை கீமோஜின் மற்றும் அவரது மகன்களையும் தான் குறிப்பிடுகிறார்கள். இவர் பெரும்பாலும் ரஷ்யா சீனாவோடு தான் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
இவர் செய்த ஒரு விஷயம் அங்கிருந்த சின்ன சின்ன இன குழுக்களை எல்லாம் ஒருங்கிணைத்தது தான். எந்த கொள்கையும் கோட்பாடுகளும் இல்லாத இவர்களுக்கு இரத்தம் தான் பொழுதுபோக்கு காட்டுமிராண்டித்தனமான இவர்களின் தாக்குதலைக் கண்டு உலகமே அஞ்சியது வயதானவர் பெண்கள் குழந்தைகள் என்று கூட பார்க்க மாட்டார்கள் என்று வரலாற்றிலே குறிப்பிடப்படுகிறது.
ஆனாலும் செங்கிஸ்கான் கிமு 1227 லேயே மரணித்து விட்டார். அதற்குப் பிறகு கீமோஜியின் மகன்கள் தான் ஆட்சி செய்தார்கள். அவர்களையும் செங்கிஸ்கான் என்று தான் குறிப்பிடுகிறார்கள்.
வரலாற்றில் சில ஆச்சரியங்கள் ஏற்படுவது உண்டு. பெண்கள் குழந்தைகள் வயோதிகர்கள் என்று கூட பார்க்காமல் அப்பாவி மக்களை கொன்று குவித்தவனை மாவீரன் என்று குறிப்பிடுகிறார்கள். தனது வீரத்திற்கு ஒப்பானவனுடன் போர் புரிபவனே மாவீரன் என்பதை வரலாறு ஏன் கண்டு கொள்ளவில்லை.
செங்கிஸ்கானை விட செங்கிஸ்கானின் மகன்கள் தான் அதிக மக்களை கொன்றார்கள். மகன்களும் அந்தக் கூட்டங்களும் செய்த செயல்கள் தான் பல நாடுகளில் இருந்த ‘வரலாற்று ஆசிரியர்கள் தங்கள் நாட்டின் வரலாறுகளை எழுதவே அழுதார்கள்’ என்று குறிப்பிடப்படுகிறது. சீனாவிலும் ரஷ்யாவிலும் மக்கள் தொகை இவர்களாலேயேக் குறைந்தது என்று குறிப்பிடப்படுகிறது. ஓநாய்கள் போல இவர்கள் புகுந்த பகுதிகள் அப்படியே அழிக்கப்பட்டது.
ஒருமுறை ஆப்கானை நிர்வகித்துக் கொண்டிருக்க கூடிய ஆளுநருக்கு தனது தூதுவரை அனுப்பினர் ஆனால் ஆப்கான் பகுதிகளை நிர்வகித்துக் கொண்டிருந்த பாரசீக ஆளுநர் செங்கிஸ்கானின் தூதுவரை கொலை செய்து விடுகிறார். அவ்வளவுதான் வெறிகொண்டு எழுந்த கூட்டம் அப்படியே ஆப்கான் பகுதிகளுக்குள் நுழைகிறது. கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டி வீழ்த்துகிறது.
இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ரஷ்யா, சீனா, ஐரோப்பா, வரைக்கும் சென்றவர்கள் தற்போது பாரசீகர்களின் அப்பாசிய பகுதிகளுக்குள்ளும் நுழைந்து விட்டார்கள்.
பல ஆண்டுகள் போர்கள் செய்து இறுதியாக கிபி 1258 இல் பாக்தாத்தில் இருந்த அப்பாசிய கலிபகத்தின் கடைசி கலிஃபாவான முஸ்தாஹ்சினை கொலை செய்கிறார்கள். அன்றைய தினம் பாக்தாத் அழுகிறது பாக்தாதின் வரலாற்றை எழுதியவர்கள் அழுதார்கள் காரணம் ஓங்கிய வாள்களை பல நாட்கள் உரைக்குள் வைக்கவே இல்லை. தெருவெல்லாம் ரத்தக்காடாக காட்சியளிக்கிறது.
மத்திய ஆசியாவில் பல அறிஞர்களாலும் மேதைகளாலும் நிறைந்திருந்த, மிகப்பெரும் அறிவொளி வீசிக்கொண்டிருந்த பாக்தாத் நகரம் எரிந்தது. அங்கிருந்த அறிஞர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். கலீபா முஸ்தாஹ்சின் குதிரைகளால் மிதிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.
இப்படி மூர்க்கத்தனமாக உள்ளே புகுந்தவர்கள் ஆங்காங்கே பிரிந்து செல்கிறார்கள். சீனாவிற்கு சென்றவர்கள் அங்கே ஆட்சியை நிறுத்தி அங்கே ஒரு கூட்டம் தங்கி விடுகிறது ரஷ்யாவிற்கு சென்றவர்கள் அங்கே தங்கி விடுகிறார்கள். பாக்தாத்தில் நுழைந்தவர்கள் மேலும் முன்னேறி மக்கா மதினாவிற்குள்ளும் சென்று விடுகிறார்கள்.
இங்குதான் அந்த கூட்டங்களுக்கு முடிவு கட்டப்படுகிறது. எத்தனை ஆண்டுகள் தான் ஒருவன் தீயவனாகவே வாழ முடியும் ஒரு நேரம் வரும் அல்லவா? அப்படிதான் அமைந்தது.
நன்றி : படம் (ஆசிரியரின் தேர்வு) இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்.