அத்தியாயம் – 34 : மக்கா முதல் மைசூர் வரை

திப்பு ரஹிம்

பெரும் தலைவலியாக மாறி இருக்கக்கூடிய சிவாஜியுடன் பேசுவதற்காக பீஜாப்பூரின் தளபதி அழைக்கப்பட்டு இருந்தார். சிவாஜியை சந்திக்க கூடிய இடத்தில் சிவாஜியின் படைகள் மறைத்து வைக்கப்பட்டன. பீஜாப்பூரின் தளபதி  அஃப்சல் கான் தனது ஆயிரம் பேர் கொண்ட படையை தூரத்தில் நிறுத்தி வைத்து விட்டு இரண்டு பாதுகாவலர்களை மட்டும் அழைத்துக் கொண்டு சந்திக்க சென்றார்.

அங்கு நடந்த சம்பவங்களை பல பேர் பல விதமாக எழுதி இருந்தாலும் முதலில் இருவரும் கட்டித்தழுவினார்கள் அதற்குப் பிறகுதான் அப்சல் கான் கொல்லப்பட்டார். பிறகு மறைந்திருந்த படைகள் அங்கு வந்த அப்சல் கானின் 1000 பேர்கள் கொண்ட படையோடு சிவாஜியின் 5000 பேர் கொண்ட படை மோதி மிகப்பெரிய போராக மாறி கிட்டத்தட்ட 3000 பேர் கொல்லப்பட்டார்கள் அந்த இடத்தில்.

இதற்குப் பிறகு சிவாஜி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் கிபி 1660 ஆம் ஆண்டு அவருடைய தோழர்களால் திடீர் தாக்குதல் நடத்தி அங்கிருந்து அவர் தப்பிக்க வைக்கப்பட்டார்.

1663 ஏப்ரலில் சிவாஜி, புனேவில் உள்ள ஔரங்கசீப்பின் மாமா, ஷாயிஸ்தா கானின் வீட்டிற்குள் நுழைந்து அவரது மனைவிகள் மற்றும் மகனை கொன்றார். மேலும் சிவாஜி தனது குழந்தைப் பருவத்தைக் கழித்த புனேவில் உள்ள ‘லால்மஹாலில்’ ஷாயிஸ்தா கான் வசித்து வந்தார்.

அது ரமலான் மாதத்தின் ஆறாம் நாள். ஷாயிஸ்தா கானின் சமையல்காரர்கள் நோன்பை முடித்துவிட்டு தூங்கச் சென்றுவிட்டனர். சில சமையல்காரர்கள் விழித்திருந்து காலை(ஸஹர்) உணவுக்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். சிவாஜியும் அவரது தோழர்களும் சத்தமில்லாமல் அந்த சமையல்காரர்களைக் கொன்றனர்.

“சிவாஜி ஷாயிஸ்தா கானின் படுக்கையறையை அடைந்ததும், அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். ஷாயிஸ்தா கானின் கை அவரது ஆயுதத்தை அடையும் முன், சிவாஜி தனது வாளால் அவரது கட்டைவிரலை வெட்டினார்,” என்று கிருஷ்ணாஜி அனந்த் சபாசத், சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றில் எழுதியுள்ளார்.

இந்த சம்பவங்களை பார்க்கும்போது சிவாஜியைக் கொள்வதற்கு யாரும் உத்தேசிக்கவில்லை அவர் 1680ல் மரணம் அடைந்தார். அவரது மனைவியும் அதே தீயில் விழுந்து இறந்தார் என்று உள்ளது. ஆனால் வரலாற்றில் சுல்தான்களால் சிவாஜி கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார், விடுதலை செய்யப்பட்டார், தப்பிச்சு போனார் என்று தான் உள்ளது. இதெல்லாம் அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாறு.

இப்படி சுல்தான்களுக்கும், சிவாஜிக்கும் தான் அதிக சண்டைகள் நடந்து கொண்டு இருந்தன. இந்த சுல்தான்கள் எல்லாம் அவுரங்கசீப்பின் அரசுக்கு கீழ் இல்லாமல் தனியாக அரசு நடத்தியவர்கள். இதெல்லாம் எதார்த்தமாக அன்றைய போர் போல் நடந்ததே ஒழிய எங்குமே மதங்களை முன்னிலைப்படுத்தி நடக்கவில்லை. 

மேலும் கோல்கொண்டா சுல்தானிடம் சிவாஜி ஒப்பந்தம் போட்டு தான் இருந்தார். அக்கம் பக்கத்து சிறுசிறு அரசர்களாகவும் பிஜாப்பூர் கோட்டையின் பொறுப்பாளராக இருந்தவரும் கூட சிவாஜியின் இனத்தைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களை எல்லாம் சிவாஜி தான் கொன்றார்.

அவுரங்கசீப்பிற்கும் சிவாஜிக்கும் அங்கிருந்த சின்ன சின்ன பகுதிகளைப் பிடிப்பதில்  தான் போட்டியிருந்தது. மராத்திய பகுதிகளில் இருந்த சிறிய சிறிய பகுதிகளை அவுரங்கசீப் பிடித்ததும் பிறகு அப்பகுதிகளை சிவாஜி மீட்டதும் என்று தான் போர்கள் நடந்துள்ளன.

ஆனால் தற்போதைய வரலாற்று ஆசிரியர்கள் இதை திரித்து இந்து முஸ்லீம் போர் போல காட்டுகிறார்கள்.

சிவாஜி ஒரு இந்துத்துவவாதி என்று குறிப்பிடப்படுகிறார்கள். உண்மையில் அவர் அப்படி இருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஒன்றை மட்டும் காட்டுகிறார்கள் அதாவது அவரது அமைச்சரவையில் அதிகம் உயர் ஜாதி இந்துக்கள் இருந்தார்கள் அவர்களின் ஆலோசனையின் பெயரில் தான் அவர் ஆட்சி நடத்தினார் என்கிறார்கள்.

ஆனால் இஸ்லாமியர்கள் ஆட்சி நடத்தினார்கள் என்றால் அங்கே முக்கிய பொறுப்புகளில் இமாம்கள் இருப்பார்கள், கிறிஸ்தவர்கள் ஆட்சி நடத்தினார்கள் என்றால் அங்கு முக்கிய பொறுப்புகளில் பாதிரியார்கள் இருப்பார்கள், இந்துக்கள் ஆட்சி நடத்தினால் அங்கே முக்கிய பொறுப்புகளில் பண்டிதர்கள் இருப்பார்கள். அவர்களிடம் அரசர்கள் ஆலோசனை கேட்பது என்பது சாதாரண ஒரு விஷயம்.

இது எதார்த்தமாக நடக்கக்கூடிய நிகழ்வுதான். இதையே காரணமாக காட்டி சிவாஜியை இந்துத்துவவாதி என்று தவறான வாதத்தை வைக்கிறார்கள். மேலும் இன்றைக்கு இருக்கக்கூடிய பல பேர் தங்களுடைய அறியாமையினால் தங்கள் இனத்தின் தலைவராக சிவாஜியைக் கூறுகிறார்கள்.

இன்னும் சொல்ல போனால் அவுரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு டெல்லியை ஆட்சி செய்த அவரது வாரிசுகள் திறன் இல்லாத கூட்டமைப்புகளை உருவாக்கி ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த போர்களில் தோல்வி அடைந்தார்கள். அப்பொழுது அனைத்து பொறுப்புகளையும் ஆங்கிலேயர்கள் எடுத்துக்கொண்டு ஓய்வூதியம் மட்டும் அவர்களுக்கு வழங்கினார்கள். அப்பொழுதெல்லாம் முகலாய அரசர்களை பாதுகாக்க கூடிய பொறுப்புகளை சிவாஜியின் மராத்திய படைத்தான் பார்த்துக் கொண்டது.

முகலாயர்கள் மற்றும் சுல்தான்களின் முக்கியமான ஆலோசகர்களாக இந்து மக்களே இருந்தார்கள்.

அதேபோல சிவாஜியின் படை பிரிவில் பிற்காலத்தில் நிறைய முஸ்லிம் பத்தான்களே இருந்தார்கள். என்று வரலாறு கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *