வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
—————————————————————————————————-
முந்தைய பகுதிகளை வாசிக்க
——————————————–
அத்தியாயம் – 1 அத்தியாயம் – 2 அத்தியாயம் – 3 அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5 அத்தியாயம் – 6 அத்தியாயம் – 7 அத்தியாயம் – 8
அத்தியாயம் – 9 அத்தியாயம் – 10 அத்தியாயம் – 11 அத்தியாயம் – 12
அத்தியாயம் – 13 அத்தியாயம் – 14 அத்தியாயம் – 15 அத்தியாயம் – 16
அத்தியாயம் – 17 அத்தியாயம் – 18 அத்தியாயம் – 19 அத்தியாயம் – 20
அத்தியாயம் – 21 அத்தியாயம் – 22 அத்தியாயம் – 23 அத்தியாயம் – 24
அத்தியாயம் – 25 அத்தியாயம் – 26 அத்தியாயம் – 27 அத்தியாயம் – 28
அத்தியாயம் – 29 அத்தியாயம் – 30 அத்தியாயம் – 31 அத்தியாயம் – 32
அத்தியாயம் – 33 அத்தியாயம் – 34
—————————————————————————————————-
அவுரங்கசீப் என்ற மன்னர் வாரிசு அடிப்படையில் மன்னராகி சிறந்த ஆட்சியை கொடுத்தார்.
புரட்சி அடிப்படையில் ஆட்சியைப் பிடித்து மன்னரானார் சிவாஜி. தங்கள் ஆட்சிகளை தக்க வைத்துக் கொள்வதற்கும் பிற பகுதிகளை பிடித்து தங்கள் நாடுகளை பெரிதாக்குவதற்கும் அன்றைய மன்னர்கள் ஒருத்தரோடு ஒருத்தர் போட்டி போட்டுக் கொண்டார்கள்.
அதற்காக முஸ்லிம் முஸ்லிம் மன்னர்களும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டார்கள்.
இந்து இந்து மன்னர்களும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டார்கள். இது எதுவுமே மதத்திற்காக நடந்தது இல்லை.
கிபி 1707ம் ஆண்டு இறந்தார் அவுரங்கசீப். மிக நீண்ட காலம் இந்தியாவை ஆட்சி செய்த அவுரங்கசீப் இந்தியாவை பொருளாதாரத்தின் மிகச்சிறந்த நாடாக உயர்த்தினார். அவருக்குப் பிறகு வந்த ஆட்சியாளர்கள் அவுரங்கசீப்பை போன்று திறமை இல்லாததின் காரணத்தினால் முகலாயப் பேரரசு வீழ்ச்சியை நோக்கி பயணிக்க தொடங்கியது.
அவுரங்கசீப்பின் உயிலில் இப்படி இருந்தது. “நான் என் கையால் செய்து விற்ற தொப்பிகளுக்கான பணம் நான்கு ரூபாய்களும் இரண்டு அனாக்களும் ஆய்பேகா என்னும் நபரின் வசம் உள்ளன. அதைக்கொண்டு என்னுடல் மீது போர்த்தவேண்டிய கஃபன் துணியை வாங்கிக்கொள்ளுங்கள்.
என் கையால் திருக்குர்ஆனை எழுத்துப்பிரதி எடுத்து விற்றதன் மூலம் கிடைக்கப்பெற்ற முன்னூற்று ஐந்து ரூபாய்கள் என் வசமுள்ளன. நான் இறக்கும் அன்று அந்தப் பணத்தை ஏழைகளுக்கு தானமாகக் கொடுத்துவிடுங்கள்.
என் தலையை எதைக்கொண்டும் மூடாமல் திறந்து வைத்துவிடுங்கள். இறைவன் எனக்கு கருணை காட்ட அது உதவும்.
என் உடலை அருகில் உள்ள இடுகாட்டில் ஆடம்பரங்கள் ஏதுமின்றி அடக்கம் செய்யுங்கள். என்று எழுதி வைத்திருந்தார்.
ஆக அவுரங்கசீப் மிகச்சிறந்த மன்னராக இருந்தாரே ஒழிய அவர் முஸ்லிம்களின் தலைவராக இல்லை. ஏனெனில் அவர் சுல்தான்களோடவும் போரிட்டு பல முஸ்லிம்கள் இறக்கவும் காரணமாக இருந்துள்ளார். கீரியும் பாம்பும் என்ற நிலையெல்லாம் இந்த வரலாறுகளில் இல்லை. ஆட்சி பகுதி தான் சண்டைகளுக்கு காரணமாக இருந்து உள்ளது.
ஒரு கட்டத்தில் டெல்லியோடு முகலாய பேரரசு முடிந்து போனது. முதலில் வரிவசூலை பார்த்து வந்த மராத்தியர்கள் அதிலிருந்து ஒரு தொகையை எடுத்துக்கொண்டு மீதத்தை டெல்லி அரசுக்கு கொடுத்தார்கள். பிறகு ஆங்கிலேயர்கள் ஒட்டுமொத்த வரி வசூலையும் எடுத்துக்கொண்டு முகலாய மன்னர்களுக்கு ஓய்வூதியம் கொடுத்தார்கள்.
முகலாயர்களின் நிலை:
மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய முகலாய அரசின் கடைசி மன்னர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருந்தது.
கிபி 1806க்கு பிறகு இரண்டாவது அக்பர் ஷா என்பவர் டெல்லியில் ஆட்சியில் இருந்தார். இவர் “தங்களுக்கு வழங்கக்கூடிய ஓய்வூதியம் போதவில்லை ஆகவே ஓய்வூதியத்தை அதிகரித்து தர வேண்டும்” என்று தனது நண்பரான ராஜா ராம் மோகன் ராயை லண்டனுக்கு அனுப்பி கோரிக்கை வைக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டார்.
முகலாய பேரரசின் கடைசி வாரிசாக முடிசூட்டி கொண்டது இரண்டாவது பகதூர்ஷா. பெரிய ஆட்சி ஒன்றும் இல்லை. ஆனால் இவர் சிறந்த கவிஞர் நிறைய கவிஞர்களையும் கூடவே வைத்திருந்தார். இந்நிலையில் வேலூரில் ஏற்பட்ட சிப்பாய் புரட்சி நாடு முழுவதும் பரவி சிற்றரசர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பகதூர் ஷாவை பேரரசராக அறிவித்து விட்டார்கள்.
அத்தனை பேர்களும் மதபாகுபாடு இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்பட்டும் புரட்சி தோல்வியில் முடிந்தது. ஆங்கிலேய அரசு, மீதமிருந்த சிற்றரசர்கள் அனைவர்களையும் சுட்டுக்கொன்றார்கள். அதேபோல் பஹதூர் ஷாவின் இரண்டு மகன்கள் பேரப்பிள்ளைகளை கைது செய்து சுட்டுக் கொன்றது.
பஹதூர் ஷாவையும் அவர் மனைவியையும் விசாரணை செய்து இந்த புரட்சிக்கு “இவர்கள் தான் காரணம்” என்று குற்றம் சுமத்தி நாடு கடத்தி பர்மாவில் விட்டது.
பெறும் வறுமையோடு போராடி அங்கேயே இறந்து போனார் பஹதூர் ஷா. கடைசியாக அவர் எழுதிய கவிதையில் “ஆறடி மண் கூட இந்தியாவில் எனக்கு இல்லை” என்று எழுதி இருந்தார். இத்தோடு முகலாயர்கள் தொடர் முடிந்து போனது.
நன்றி : படம் (ஆசிரியரின் தேர்வு) இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்.