வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
—————————————————————————————————-
முந்தைய பகுதிகளை வாசிக்க
——————————————–
அத்தியாயம் – 1 அத்தியாயம் – 2 அத்தியாயம் – 3 அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5 அத்தியாயம் – 6 அத்தியாயம் – 7 அத்தியாயம் – 8
அத்தியாயம் – 9 அத்தியாயம் – 10 அத்தியாயம் – 11 அத்தியாயம் – 12
அத்தியாயம் – 13 அத்தியாயம் – 14 அத்தியாயம் – 15 அத்தியாயம் – 16
அத்தியாயம் – 17 அத்தியாயம் – 18 அத்தியாயம் – 19 அத்தியாயம் – 20
அத்தியாயம் – 21 அத்தியாயம் – 22 அத்தியாயம் – 23 அத்தியாயம் – 24
அத்தியாயம் – 25 அத்தியாயம் – 26 அத்தியாயம் – 27 அத்தியாயம் – 28
அத்தியாயம் – 29 அத்தியாயம் – 30 அத்தியாயம் – 31 அத்தியாயம் – 32
—————————————————————————————————-
ஔரங்கசீப்
உலகை எந்த இனம் ஆட்சி செய்தாலும் அவர்கள் இஸ்லாத்திற்குள் வந்து விட்டால் சட்டம் ஒன்றுதான். கொலைக்கு கொலை என்றும், திருட்டுக்கு கை வெட்டுவதும், கற்பழிப்புக்கு மரண தண்டனை, என்பதும் இஸ்லாத்தின் ஷரியா என்னும் சட்டமாகும்.
இன்று வரை ஆண்டியானாலும் அரசன் ஆனாலும் சட்டம் அனைவருக்கும் பொதுவானது தான். பல அரச குடும்பத்தின் வாரிசுகள் சவுதியில் தலை வெட்டப்பட்டு இருக்கிறார்கள்.
படையெடுத்து வந்த அத்தனை இஸ்லாமிய அரசர்களுக்கும் இது பொருந்தும். ஆகவே அவர்கள் எந்த ஒரு தனி மனிதனுடைய சொத்துக்களையும் கொள்ளை அடிக்க முடியாது.
அதே நேரத்தில் கனிமத் என்று ஒன்று உள்ளது. எதிரிகளோடு சண்டையிட்டு அவர்கள் விட்டுச் செல்லும் பொருட்கள் ஜெயித்தவர்களுக்கு உரியது.
மேலும் முற்றுகையிட்ட பகுதிகளில் சமாதான ஒப்பந்தங்களில் குறிப்பிட்டபடி பொருட்கள் பரிமாறப்படும். ஜெயித்தவர்கள் கேட்பதை தோற்றவர்கள் கொடுப்பார்கள். இதுதான் அன்றைய நடைமுறையாக இருந்தது.
இஸ்லாத்தின் பெயரால் ஆட்சி செய்தவர்கள் “கொள்ளையடித்தார்கள் ஒரு தனிமனிதனுடைய சொத்தை சூறையாடினார்கள் என்பதெல்லாம் நம்ப முடியாத ஒன்று”.
முகலாயர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் மக்களிடத்திலே கடுமையான ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டது. தீண்டாமைகள் தலை தூக்கி நின்றது.
சில பகுதிகளில் பெண்கள் மேலாடைகள் அணிய கூடாது! என்றும், இன்னும் சில பகுதிகளில் முலை வரி என்றும் வசூலித்து அடக்கு முறையில் ஈடுபட்டார்கள். குறிப்பாக பெண்களுக்கு எதிராக கடுமையான சட்ட திட்டங்களை வைத்திருந்தார்கள்.
அதேபோல வட இந்தியாவில் கணவன் இறந்து விட்டால் அவன் எரிந்து கொண்டிருக்கும் பொழுது அதிலே மனைவியை தள்ளிவிட்டு கொன்றார்கள். இதை உடன்கட்டை ஏறுதல் என்று பெயரும் வைத்திருந்தார்கள்.
முதலில் பிறந்த பெண்களை கோவில்களுக்கு நேர்ந்து விட்டு அதற்கு தேவதாசி முறை என்றார்கள்.
ஒரு சில மக்களை மனிதர்களை விட கேவலமாக நடத்தினார்கள். நிமிர்ந்து நிற்க கூட அனுமதிக்காதவர்களாக பல பகுதிகளில் நடந்து கொண்டார்கள் கொன்று குவித்தார்கள்.
முகலாயர்களில் முதலில் வந்த ஆட்சியாளர்கள் இதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. அந்தப்புரங்களையும் ஆடம்பரமான வாழ்க்கையையும் வாழ்ந்தார்கள். இன்னும் அரசர்களின் பக்கத்திலிருந்த சிலருடைய சொல்பேச்சுக்கு இணங்கி தான் ஆட்சி செய்தார்கள்.
இன்னும் சொல்லப் போனால் அவர்கள் தங்கள் திருமண உறவுகளை ரஜபுத்திரர்களோடு ஏற்படுத்திக் கொண்டார்கள். இப்படி தங்களை ஆடம்பரமாகவும் அந்தப்புரங்களை அழகுப்படுத்தும் காரியங்களிலும் ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
அடிதட்டு மக்கள் ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சூழலில் இவர்கள் எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை. நபிகளார் காட்டித் தந்த அந்த வழிமுறையை இவர்கள் பின்பற்றவும் இல்லை.
இந்த முகலாயர்களில் வந்த மிகச்சிறந்த மன்னர் ஒருவர் தான் அவுரங்கசீப். இவர் சஹாபா காலத்து ஆட்சியை மக்களுக்கு வழங்கவே ஆசைப்பட்டார்.
ஆடம்பரமாக வாழ்ந்த மூதாதையர்களின் வாழ்க்கையை அவர் வெறுத்தார். மேலும் மக்களுடைய பொருளாதாரத்தைக் கொண்டு தாஜ்மகால் போன்ற ஆடம்பரமான கட்டடங்களையும் அதற்காக பலியான பல பேருடைய உயிருக்கும் காரணமாக இருந்த தனது தந்தையை வீட்டுக்காவலில் வைத்தார்.
மூதாதையர்கள் தான்தோன்றித்தனமாக வாழ்ந்ததை கூடாது என்று சொன்ன அவுரங்கசீப்பை எதிர்த்து வந்தவர்களை சகோதரர்களாக இருந்தாலும் துவம்சம் செய்தார். மேலும் அரசாங்கத்தோடு ஒட்டி உரசிய ராஜபுத்திர மக்களை தூரமாக வைத்தார். அதுவே மிகப்பெரிய எரிச்சலாக அவர்களுக்கு இருந்தது.
அத்தனைப் பெரிய அரசராக, எல்லோரையும் போல் வாழ்ந்து விடாமல் தனது செலவிற்கு, தானே கைப்பட தொப்பியையும் தயாரித்து குர்ஆனையும் எழுதி அதை விற்று அதில் தனது வாழ்க்கையை நடத்தினார்.
மிக முக்கியமாக அவர்களிடத்திலே இருந்த தீண்டாமையையும் உடன்கட்டை ஏறுவதையும் தடை செய்தார். இதுவே அவுரங்கசீப்பை கண்மூடித்தனமாக எதிர்க்கவும் அவரைப் பற்றிய வரலாறை திருத்தி எழுதவும் காரணமாக இருந்தது.
ஆகவே அவரை எதிர்த்த மன்னர்களை நாயகர்களாக காட்டினார்கள். மிகச்சிறந்த, நீண்ட காலம் மக்களின் மனதை வென்ற மன்னனை தீயவனாகவும் காட்டினார்கள்.
வெறுப்பின் உச்சமாக “அவர் ஒரு கையில் வாலையும் இன்னொறு கையில் குர்ஆனையும் வைத்து மதத்தை பரப்பினார்” என்று அபாண்டமான குற்றச்சாட்டையும் வைத்தார்கள். அவர் நினைத்திருந்தால் அப்பொழுதே இந்தியா முழுவதும் இஸ்லாத்தை பரப்பி இருக்க முடியும்.
ஆனால் குரானில் சொல்லப்பட்ட “உங்களுடைய மார்க்கம் உங்களுக்கு என்னுடைய மார்க்கம் எனக்கு” என்பதையும், “இந்த மார்க்கத்தில் எந்த ஒரு நிர்ப்பந்தமும் இல்லை, எடுத்து சொல்வதே உங்கள் மீது கடமை” என்பதையும், “யாரையும் நீங்கள் மாற்ற முடியாது அவருடைய உள்ளத்தை மாற்றுவது என் பொறுப்பில் உள்ளது” என்பதை இறைவன் சொல்லி உள்ளதையும் எந்த ஒரு முஸ்லிமும் மீற மாட்டான்.
“மார்க்கத்தை எடுத்து சொல்வது தான் உங்களது கடமை. யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. அது உங்கள் வேலையும் இல்லை கடமையும் இல்லை” என்ற இந்த விஷயங்களை எல்லா முஸ்லிம்களும் அறிந்த ஒன்று.
அப்படி இருக்கும்போது முகலாய மன்னர்களிலேயே மார்க்கத்தை நன்றாக அறிந்திருக்கக் கூடிய அவுரங்கசீப் வாளைக் கொண்டு மார்க்கத்தை பரப்பினார் என்பதெல்லாம் வன்மத்தின் உச்சம். அதேநேரம் மங்கோலியர்களை கண்டு உலக அரசர்கள் எப்படி பயந்தார்களோ அதே போல் இந்தியாவில் மராத்தியர்களை கண்டு சிறு மன்னர்கள் பயந்தார்கள்.
கொரில்லா முறையில் தாக்குவது, தந்திரமான செயல்பாடு மூலம் மிகப்பெரிய சேதாரங்களை பக்கத்தில் உள்ள நாடுகளில் ஏற்படுத்துவது என்று நடந்து கொண்டார்கள். அவர்கள் மிகப்பெரிய படைப்பிரிவுகளையும் வைத்திருந்தார்கள்.
திடீர் திடீரென்று தாக்கி அங்கிருக்கக்கூடிய செல்வங்களை கொள்ளையடித்துச் செல்வது தான் மராத்தியர்களின் வேலையாக இருந்தது. அவர்களின் தலைவர் தான் சிவாஜி. பலமுறை அவுரங்கசீப் பால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அத்தனை கொடுமைக்காரராக ஔரங்கசீப் இருந்திருந்தால் அப்பொழுதே அவரைக் கொன்று இருப்பார்.
சிவாஜி புரட்சியை ஏற்படுத்தும் நேரத்தில் அவரை சுற்றி மூன்று சுல்தான்கள் இருந்தார்கள். அகமது நகர், பீஜாப்பூர், கோல்கொண்டா பகுதி அரசு. இவர்கள் மூவரும் அவுரங்கசீப்பின் முகலாயர் ஆட்சியின் கீழ் சேரவில்லை. தனித்தனியாக ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். இவர்களை எதிர்த்து தான் முதலில் தாக்குதலை தொடர்ந்தார் சிவாஜி.
நன்றி : படம் (ஆசிரியரின் தேர்வு) இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்.