வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
—————————————————————————————————-
முந்தைய பகுதிகளை வாசிக்க
——————————————–
அத்தியாயம் – 1 அத்தியாயம் – 2 அத்தியாயம் – 3 அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5 அத்தியாயம் – 6 அத்தியாயம் – 7 அத்தியாயம் – 8
அத்தியாயம் – 9 அத்தியாயம் – 10 அத்தியாயம் – 11 அத்தியாயம் – 12
அத்தியாயம் – 13 அத்தியாயம் – 14 அத்தியாயம் – 15 அத்தியாயம் – 16
அத்தியாயம் – 17 அத்தியாயம் – 18 அத்தியாயம் – 19 அத்தியாயம் – 20
அத்தியாயம் – 21 அத்தியாயம் – 22 அத்தியாயம் – 23 அத்தியாயம் – 24
அத்தியாயம் – 25 அத்தியாயம் – 26 அத்தியாயம் – 27 அத்தியாயம் – 28
அத்தியாயம் – 29 அத்தியாயம் – 30 அத்தியாயம் – 31 அத்தியாயம் – 32
அத்தியாயம் – 33 அத்தியாயம் – 34 அத்தியாயம் – 35
—————————————————————————————————-
மைசூர்
17 ஆம் நூற்றாண்டுகளில் உலகம் முழுவதும் அரசர்கள் தங்கள் படைகளில் முஸ்லிம்களை சேர்த்துக் கொள்ள ஆசைப்பட்டார்கள். குதிரை படை வீரர்களாக இருப்பவர்களை இராவுத்தர்கள் என்றும் கடற்படையில் பணி செய்பவர்களை மறைக்காயர்கள் என்றும் பொதுவாக துலுக்கன் என்றும் நமது நாட்டிலே அழைக்கப்பட்டார்கள். அதாவது இந்த பெயர்கள் அனைத்துமே படை வீரர்கள் என்பதை குறிக்கும். முஸ்லிம்கள் மிகச் சிறந்த வீரர்கள் என்ற கருத்து அன்றைக்கு ஏற்பட்டது.
அப்படிதான் 1700 ஆம் ஆண்டுகளில் மைசூர் நாட்டில் ஹைதர் அலியின் மூதாதையர்கள் தளபதிகளாக இருந்தார்கள். மைசூர் நாடு என்பது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் ஒரு பகுதியும் கேரளாவும் இணைந்தது.
திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி இருவரும் ஆங்கிலேயர்களுடன் மைசூர் போர்கள் என்று அழைக்கப்பட்ட சண்டைகள் நடந்ததில் பெரும்பாலும் கும்பகோணத்திலும், பரங்கிப்பேட்டையிலும், திருவண்ணாமலை, திண்டுக்கல், ஆம்பூர், மதுரையிலும் தான். ஆக மைசூர் சாம்ராஜ்யம் என்பது பெரும்பாலான இடங்கள் தமிழ்நாடு என்பது தான் உண்மை.
முதலில் விஜயநகர பேரரசில் அங்கமாக இருந்தது மைசூர் அரசு. விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மிகப்பெரிய பேரரசாக விளங்கியது மைசூர் சாம்ராஜ்யம். இவர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்தது இந்த மராத்தியர்கள் தான். பக்கத்தில் இருந்த சிற்றரசர்களையும் ஆங்கிலேயர்களையும் சாதாரணமாக எதிர்கொண்டவர்கள் மராத்தியர்களால் தான் வீழ்ச்சி கண்டார்கள்.
உடையார் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மைசூர் பேரரசை ஆண்டு வந்தார்கள். திடீர் திடீரென்று படையெடுத்து வந்த மராத்தியர்கள் மைசூர் பேரரசின் கீழ் இருந்தப் பல பகுதிகளைக் கைப்பற்றினார்கள்.
நாளுக்கு நாள் அதிகரித்த மராத்தியர்களின் கொரிலா தாக்குதல்களை தாக்கு பிடிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் மைசூர் பேரரசு மொத்தத்தையும் விட்டுவிட்டு குடும்பத்தார்களை மட்டும் அழைத்துக் கொண்டு தப்பிக்கும் நிலை உருவானது.
கிபி 1734ல் மைசூர் பேரரசின் மன்னராக இளம் வயது கிருட்டிண ராச உடையார் இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்ட மராத்தியர்கள் மைசூர் சாம்ராஜ்யத்தின் தலைநகரைப் பிடிப்பதற்கு தயாராக இருந்தார்கள்.
அப்போது எப்படி தப்பிப்பது? என்ற நிலையில் தான் மன்னர் இருந்தார். கிட்டத்தட்ட மைசூர் சாம்ராஜ்யம் முடிவுக்கு வரும் சூழ்நிலையில் அனைவரும் கை விரித்த நிலையில் தான் ஹைதர் அலி வருகிறார்.
ஒருவேளை மைசூர் பேரரசு மராட்டியர்களிடம் வீழ்ந்து இருந்தால் இன்றைக்கு நாம் சுவாசிக்கக்கூடிய திராவிட காற்று இருந்திருக்காது. வட இந்தியாவைப் போல தான் தமிழகமும், கேரளாவும், ஆந்திராவும் இருந்திருக்கும்.
மொழிவாரி மாநிலங்களை பிரித்ததற்கும், தென்னிந்திய வளர்ச்சிக்கும், “திராவிட நாடு” என்று நாம் சொல்லக்கூடிய இந்த சொல்லுக்கும் முக்கிய சொந்தக்காரர் ஹைதர் அலி தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
திப்பு சுல்தான்
கிபி 17ம் நூற்றாண்டில் பீஜாப்பூரை ஆட்சி செய்த சுல்தான்கள் பாரசீக வாரிசுகள் ஆவார்கள். ஆகவே அந்தப் பகுதிகளில் ஷியா மற்றும் சூஃபீ கொள்கைகளும் நிறைந்து இருந்தன. 1686ல் நடந்த ஒரு போரில் நிறைய குடும்பங்கள் இறந்து போனது.
சூஃபிக்கள் மார்க்க போதனைகளையும் தர்காக்களையும் கட்டி அதை பராமரித்து கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் அங்கிருந்து கிளம்பி வேறு பகுதிகளில் குடியேற தொடங்கினார்கள். அவர்கள் இறுதியாக கோலார் எனும் பகுதியில் வந்து குடியேறினர். இவர்கள் அங்கிருந்த படைகளில் சேர்ந்து பணிசெய்தனர். அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் ஃபத்தே முஹம்மத் என்பவர்.
அந்தப் பகுதியில் ஆட்சி செய்த ஆற்காடு நவாப் அவருக்கு தனது படை பிரிவில் ராவுத்தராக அதாவது குதிரை படை வீரராக பணி கொடுத்தார். பிறகு படிப்படியாக முன்னேறி தளபதியாகவும் ஆனார். பிறகு அங்கிருந்து தஞ்சாவூர் பகுதிக்கு வந்தவர் அங்கே திருமணம் செய்கிறார். இவர்களுக்கு பிறந்தவர் தான் ஹைதர் அலி.
ஹைதர் அலி வளர்ந்ததும் உடையாரின் படையில் சேருகிறார். அப்போது மன்னர் கிருட்டிண ராச உடையார் 20 வயசில் இருந்தார். அப்போதே ஆங்கிலேயர்களிடம் நடந்தப் போரிலே ஹைதர் அலியின் போர் வீரத்தை கண்டார்.
அமைச்சர் நஞ்சராசர் ஹைதர் அலியை திண்டுக்கல்லின் பொறுப்பாளராக நியமித்தார். வரி வசூல் செய்து அந்தப் பகுதியில் இருக்கும் படைகளை பராமரிக்க வேண்டும்.
அதை மட்டும் அவர் செய்யவில்லை ஆங்கிலேயர்களுக்கு நிகராக அங்கே ஆய்வு கூடாரங்களை அமைத்து பீரங்கிகளையும் மூங்கிலின் ஏவுகணைகளையும் தயாரித்தார். மிகப்பெரிய சக்தியாக உருவாகிவிட்ட ஹைதரைக் கண்டு எதிரிகள் அச்சம் கொள்ள துவங்கினர்.
1758ல் நடந்த உள்ளூர் கலகத்தை அடக்கும் பொறுப்பை ஹைதர் அலியிடம் ஒப்படைக்கப்படைத்தார்கள். மிகத் திறமையாக அந்த கலகத்தை அடக்கினார். அதன் காரணமாக மைசூர் படைகளின் நாயகன் ஆனார்.
அடுத்த ஆண்டு 1759ல் மராட்டிய படை மைசூரை தாக்கியது. கிட்டத்தட்ட மைசூரின் அத்தனை பகுதிகளும் மராட்டியர்களின் கைகளில் சென்று விட்டது. மன்னர் தப்பித்து ஓடக்கூடிய சூழ்நிலை உருவாகியது.
மராட்டியர்களுடன் சமாதானமாக போய் அந்த பகுதியை விட்டுக் கொடுத்துடலாம் என்ற எண்ணத்தில் இருந்த மன்னருக்கு “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று ஆறுதல் சொன்ன ஹைதர் அலி மராட்டியப் படையை விரட்டி அடித்து மீண்டும் மைசூர் பேரரசை மீட்கிறார். குறிப்பாக இன்றைய தமிழ் நாடு மராட்டியர்களிடம் இருந்து மீட்கப்பட்டது.
அதைப் பார்த்து மகிழ்ந்து போன மன்னர் “பதே ஹைதர் பகதூர்” என்ற பட்டத்தை வழங்கி, அனைத்து பொறுப்புகளையும் கிட்டத்தட்ட அரசனுடைய அத்தனை பொறுப்புகளையும் ஹைதர் அலியிடம் கொடுத்து விடுகிறார் உடையார். இதற்குப் பிறகு மக்கள் மன்றத்தின் அரசனாக வலம் வர துவங்கினார் ஹைதர்.
நன்றி : படம் (ஆசிரியரின் தேர்வு) இணையத்திலிருந்து
திங்கள்கிழமை தொடரும்.