அத்தியாயம் – 31 : மக்கா முதல் மைசூர் வரை

வரலாற்றுத் தொடர்

திப்பு ரஹிம்

இந்தியா

பிகளார் காலத்தில் அவர்களின் கண் முன்னேயே குர்ஆன் எழுதப்பட்டு விட்டது. குர்ஆனுக்கு விளக்கமாக வந்த நபிகளாருடைய சொல், செயல், அங்கீகாரம் அடுத்த சில நூற்றாண்டுகளிலேயே நூல்களாக எழுதப்பட்டு விட்டது. இன்றைக்கு யாராவது நபிகளார் சொன்னார்கள் குர்ஆன் சொன்னது என்றால்…

அது எந்த நூலில் உள்ளது? அதனுடைய பாகம் எது? எண் எது? என்று சேர்த்தே தான் குறிப்பிட வேண்டும். அதைத் தாண்டி புத்தகத்தில் பதிவு செய்யாத எதையுமே கூற முடியாது.

அதேபோல அன்றைய வரலாறுகளை கலீபாக்களுடைய காலத்திலேயே ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு குழுக்களைப் பற்றியும் அப்பொழுதே எழுதி வைக்கப்பட்டது.

இப்படி அரபு தேசத்தினுடைய வரலாறுகள் உடனுக்கு உடனே எழுதப்பட்டு அது ஆவணம் ஆக்கப்பட்டு விட்டது.

குறிப்பாக இப்னு பட்டுட்டா போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் நேரடியாக களங்களுக்குச் சென்று பார்த்து, வரலாறுகளை எழுதிய அரேபியர்களும் பாரசீகர்களும் அதிகம்.

அதில் கொஞ்சம் கூடுதலாகவும் குறைவாகவும் சில நிகழ்வுகள் சொல்லப்பட்டிருந்தாலும் காழ்ப்புணர்வுகள் இல்லாமல் எழுதப்பட்டன.

ஆனால் நமது தேசத்தினுடைய வரலாறுகள் அப்படி இல்லை! நடந்த சம்பவங்களை வரலாற்று ஆசிரியர்கள் உடனுக்கு உடனே பதிவு செய்தாலும்…

அந்த வரலாறுகளில் பெரும்பாலும் காணாமல் போய்விட்டது அல்லது ஒழிக்கப்பட்டது.

பிறகு வந்த சில எழுத்தாளர்கள் தங்களது வன்மத்தை வரலாறுகளிலே காண்பித்தார்கள். ஆனாலும் இன்றளவுக்கும் உண்மையான வரலாறுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் நிறைய வரலாற்று ஆசிரியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பழைய இந்தியாவின் வரலாறுகள் இன்னமும் அரபியிலும் பார்ஸியிலும் உள்ளது. மேலும் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட பல நூல்களும் லண்டனில் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் சரித்திரங்கள் பெரும்பாலும் லண்டன் அருங்காட்சியகங்களில் தான் உள்ளது.

ஆமாம் நமது தேசத்திற்கு இஸ்லாம் நபிகளார் காலத்திலேயே வந்துவிட்டிருந்தது. ஆனால் அப்போது நாம் அழைக்கக்கூடிய இந்தியா என்ற பெயர் இல்லை. மிகப்பெரிய ஆட்சிப் பகுதியாக டெல்லி தான் விளங்கியது.

ஆப்கானிஸ்தானை அடுத்து சிந்து நதி பகுதிகள் என்று அழைக்கப்பட்டது. அதற்கு அடுத்தது பாகிஸ்தானில் இருக்கக்கூடிய சில பகுதிகளில் தான் ஆட்சிகள் நடந்து கொண்டிருந்தன. கிபி 712ல் முகம்மது பின் காசிம் என்பவரது தலைமையில் தான் படைகள் இந்தியாவிற்குள் வந்தது. அப்போதைய இந்தியா என்பது பாகிஸ்தானின் லாகூரை ஒட்டிய பகுதிகள், சிந்து, பஞ்சாப், குஜராத் வரை தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *