அத்தியாயம் – 32 : மக்கா முதல் மைசூர் வரை

திப்பு ரஹிம்

மது இந்தியாவில் மூன்று பக்கம் கடலால் சூலப்பட்டிருக்கிறது ஒரு பக்கம் மலைகளால் சூழப்பட்டு இருக்கிறது.

ஆரம்ப கால மக்கள் ஆசியப் பகுதிகளுக்கு செல்வதற்கு இலகுவாக இருப்பது ராஜஸ்தான், குஜராத், போன்ற பகுதிகளிலிருந்து பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வழியாக போவதுதான்.

சிந்து சமவெளிக்கு அடுத்ததாக ஆப்கானிஸ்தான் இருக்கிறது அதைத் தாண்டி ஈரான் இருக்கிறது. அன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவின் வலது பக்கம் மிகப்பெரிய ஒரு பேரரசாக இருந்தது பாரசீகம் தான். அதாவது ஈரான்.

ஆகவே ஈரானில் இருந்து தான் உண்மையான இந்தியா துவங்குகிறது. முகமதியர் எழுச்சியில் பாரசீகம் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளோட தனி ஆட்சி பகுதியாக மாறுகிறது. எந்த அரசாங்கமும் இந்தியாவிற்குள் வந்தாலும் பாரசீகத்தில் என்ன சமயம் இருக்கிறதோ அது இந்தியாவிற்குள்ளும் வந்துள்ளது.

மிக நீண்ட காலங்களுக்கு முன்பாக அதாவது யூதர்கள் வருவதற்கு முன்பே அங்கே ஆரியர்கள் ஆட்சியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவர்கள் தான் முதலில் இந்தியாவிற்கு வந்தார்கள். இங்கு இருக்கக்கூடிய அரசுகளில் கோலோச்சினார்கள், அவர்களே மதங்களை தோற்றுவித்தார்கள். என்று சொல்லப்படுகிறது.

அதற்குப் பிறகு அரபியில் மஜுஸி என்று சொல்லக்கூடிய நெருப்பை வணங்கக் கூடியவர்கள் வந்தார்கள். இன்னும் நமது நாட்டில் சௌராஷ்டிரா மக்கள் நெருப்பை தான் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்குப் பிறகு வந்தவர்கள் முகமதியர் என்று அழைக்கப்பட்டார்கள். பிறகு கடல் மார்க்கமாக ஆங்கிலேயர்கள் வந்தார்கள்.

இப்படி தான் நபிகளார் உடைய காலத்திற்குப் பிறகு கிபி 712ல் வந்த முகமது பின் காசிம் அதைத்தொடர்ந்து கிபி 1210 வரை குத்துபுதீன் ஐபெக் லாகூரை தான் இந்தியாவின் தலைநகராக வைத்து ஆட்சி செய்தார். பிறகு தான் அது டெல்லிக்கு மாற்றப்பட்டது. (தற்போது லாகூர் பாகிஸ்தானில் உள்ளது)

பிறகு டெல்லி சுல்தான்களின் காலத்தில் தான் டெல்லியை தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தினார்கள். டெல்லியின் கீழாக பஞ்சாப் குஜராத் மற்றும் வங்காளப் பகுதிகள் இருந்தது.

சில நேரங்களில் ரஜபுத்திரர்கள் இந்த பகுதிகளை ஆட்சி செய்தார்கள். ஆனால் எவரும் தற்போது இருக்கக்கூடிய இந்தியாவின் தெற்குப் பகுதிகளை ஆள முயற்சிக்கவில்லை! என்று தான் சொல்ல வேண்டும்.

அன்றைய காலத்தில் அந்த மன்னனுடைய பெயராகவோ அல்லது அந்த மக்களுடைய பெயரிலோ அல்லது ஒரு நகரத்தின் பெயரில்தான் நாடுகள் அழைக்கப்பட்டது.

அதேபோல் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் சேர, சோழ, பாண்டிய நாடுகள் கோலோச்சி கொண்டிருந்தது. அவர்களுக்குப் பிறகு படிப்படியாக நாடுகள் உடைக்கப்பட்டு துண்டு துண்டாக சிறிய சிறிய மன்னர்கள் மக்களை ஆட்சி செய்ய துவங்கினார்கள். சொத்து பிரிப்பது போல் நாடுகளையும் பிரித்து ஆட்சி செய்தார்கள்.

கிபி 1324ல் கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் டெல்லியை  ஆட்சி செய்த முகம்மது பின் துக்ளக் தான் இன்றைய இந்தியாவை உருவாக்கியவர். டெல்லிக்கு கீழாக இருந்த பல சிற்றரசர்களை விரட்டி விட்டு ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார்.

கிபி 1526 ஆம் ஆண்டு டெல்லியை ஆட்சி செய்த இப்ராஹிம் லோடி என்பவரை தோற்கடித்து பாபர் உள்ளே வருகிறார். இவருக்குப் பிறகு இந்தியாவை ஆட்சி செய்தவர்களை முகலாயர்கள் என்று அழைக்கப்படுகிறது. மங்கோலிய இனத்தைச் சேர்ந்ததால் ‘முகல்’ என்று அரபியில் பெயர் மாற்றம் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *