வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
—————————————————————————————————-
முந்தைய பகுதிகளை வாசிக்க
——————————————–
அத்தியாயம் – 1 அத்தியாயம் – 2 அத்தியாயம் – 3 அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5 அத்தியாயம் – 6 அத்தியாயம் – 7 அத்தியாயம் – 8
அத்தியாயம் – 9 அத்தியாயம் – 10 அத்தியாயம் – 11 அத்தியாயம் – 12
அத்தியாயம் – 13 அத்தியாயம் – 14 அத்தியாயம் – 15 அத்தியாயம் – 16
அத்தியாயம் – 17 அத்தியாயம் – 18 அத்தியாயம் – 19 அத்தியாயம் – 20
அத்தியாயம் – 21 அத்தியாயம் – 22 அத்தியாயம் – 23 அத்தியாயம் – 24
அத்தியாயம் – 25 அத்தியாயம் – 26 அத்தியாயம் – 27 அத்தியாயம் – 28
அத்தியாயம் – 29 அத்தியாயம் – 30 அத்தியாயம் – 31 அத்தியாயம் – 32
அத்தியாயம் – 33 அத்தியாயம் – 34 அத்தியாயம் – 35 அத்தியாயம் – 36
—————————————————————————————————-
ஹைதர் அலியின் வளர்ச்சியை கண்டவர்கள் அவரை ஒடுக்குவதற்காக மராட்டியர்களும், ஹைதராபாத் நிஜாமும் ஒன்று சேர்ந்தார்கள். கூடவே ஆங்கிலேயர்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டார்கள்.
ஹைதர் அலியோ பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சுப் படையுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார். மன்னர் தனது முழு பொறுப்பையுமே ஹைதர் அலியிடம் கொடுத்துவிட்டு பொம்மையாக அமர்ந்து கொண்டார்.
இது பொறுக்க முடியாத அமைச்சர்கள் ஹைதர் அலிக்கு எதிராக செயல்பட துவங்கினார்கள். ‘தனக்கு எதிராக கடும் சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது’ என்பதை தெரிந்து கொண்ட கைதர் அலி…
உடனடியாக இரண்டு அமைச்சர்களை கைது செய்து விட்டு 1762ல் மைசூர் பேரரசின் அரசராக முடிசூட்டிக் கொண்டார். அதற்குப் பிறகு பல்வேறு விதமான நடைமுறைகளையும் சீர்திருத்தங்களையும் அரசு நிர்வாகத்தில் செய்தார்.
40 நாள் சம்பளம் முறையை அறிமுகப்படுத்தினார். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் அசைக்க முடியாத தலைவனாக மாறிப் போனார். விவசாயிகளின் தோழனாகவும் மத நல்லிணக்க மனிதனாகவும் திகழ்ந்தார்.
இதே நேரத்தில் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பது போல திப்பு சுல்தான் சின்ன வயதிலிருந்து தனது தந்தையின் ‘போர்’ திறனைக் கண்டு வளர்ந்து கொண்டிருந்தார். மிக சிறு வயதிலேயே ஆங்கிலேயப் படையுடன் மோதும் கலையையும் கற்றுக் கொண்டார்.
1780 முதல் 1784 வரை இரண்டாம் கர்நாடகப் போர் நடந்தது. 100 பீரங்கிகள், 80 ஆயிரம் வீரர்களுடன் தாக்குதலை ஹைதர் நடத்தினார் 1782ல் ஹைதர் அலி இறந்த பிறகு திப்பு சுல்தான் மன்னராக ஆனார்.
ஆற்காடு, பரங்கிப்பேட்டை, வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் போர் தீவிரமாக நடந்தது. பேரம்பாக்கம் என்னுமிடத்தில் இரண்டாயிரம் ஆங்கிலேய வீரர்கள் கொல்லப்பட்டு, இரண்டாயிரம் ஆங்கில வீரர்கள் கைது செய்யப் பட்டனர்.
திப்பு சுல்தான் பதவியேற்றதில் இருந்து இருந்து தொடர்ந்து ஆங்கிலேயர்களுடனும் மராட்டியர்களுடனும் பக்கத்திலிருந்த சிறு சிறு அரசர்களுடனும் சண்டையாகவே இருந்தது.
அதே நேரம் தமிழகத்தின் உள்பகுதியில் இருந்த அன்றைய சிற்றரசர்களாக இருந்தவர்களுக்கு திப்பு சுல்தானின் படைகள் பெரும் உதவியாக இருந்தது. ஹைதருக்கு பிறகு மீண்டும் ஆட்சி உடையார் வம்சத்தினம் வரும் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு அது பெரும் ஏமாற்றத்தை தந்தது ஆகவே உள்ளே இருந்து திப்பு சுல்தானுக்கு எதிராக குழி தோண்டவும் ஆரம்பித்தார்கள்.
திப்பு சுல்தானின் கடைசி சண்டையை பல்வேறு விதமாக எழுதி வைத்திருந்தாலும், அன்றைக்கு ஏனோ திப்பு சுல்தானும் அவருடைய குறைந்த படையும் மட்டும் தான் அங்கே இருந்தது.
மராட்டியர்களின் மாபெரும் படையும், ஆங்கிலேயர்களுடைய படையும், ஹைதராபாத் நிஜாமுடைய படைகளும் கோட்டையைத் தாக்கியது.
வரலாறுகளில் அரசர்கள் பின்னே நின்று கொண்டு சிப்பாய்களை சண்டை போட விடுவார்கள். தோற்கும் பட்சத்தில் அவர்களும் அவர்களுடைய குடும்பத்தார்களும் மட்டும் தப்பித்து போவதே சில மன்னர்களுக்கு வழக்கமாக இருந்தது.
அதற்கு நேர் எதிராக இருந்தார் திப்பு சுல்தான். எப்போதும் போல இருக்கக்கூடிய ஆடைகளையும் களைந்து விட்டு சாதாரண சிப்பாயின் உடையில் அன்றைக்கு இருந்தார்.
படைகள் தோற்கடிக்கப்பட்டு ஆங்கிலேயர்கள் கோட்டைக்கு உள்ள நுழைந்து திப்பு சுல்தானைத் தேடினார்கள் எங்குமே கிடைக்கவில்லை.
உடனே ஆங்கிலேயர்கள் “திப்பு சுல்தான் தப்பி சென்று விட்டார்” என்று அறிவித்தார்கள்.
வெகுண்டெழுந்த அங்கிருந்த திப்பு சுல்தானின் வீரர் ஒருவர் “எங்கள் சுல்தான் அப்படிப்பட்டவர் இல்லை. இங்கு தான் அவர் இருப்பார் தேடிப் பாருங்கள்” என்றார்.
ஆமாம் அவர் அங்கு தான் இருந்தார்…
சாதாரண சிப்பாய் உடையில் இறந்து கிடந்த திப்புசுல்தானை தேடிக் கண்டுபிடித்தார்கள்.
திப்பு சுல்தான் இறந்துவிட்டார் என்பது ஆங்கிலேயர்களுக்கு பெறும் சோகத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் ஆங்கிலேயர்களுக்கு இந்தியாவிலே கண்ட எதிரிகளில் மிகப் பெரும் சிம்ம சொப்பனமாக இருந்தவர். அதோடு திப்பு சுல்தான் அடிபணிந்து விட்டால் ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கக்கூடிய அத்தனை மன்னர்களும் அடிபணிந்து விடுவார்கள் என்று நினைத்தார்கள்.
ஆனால் அவர்களின் நினைப்பு பலிக்கவில்லை வீர மரணத்தோடு தனது வாழ்வை முடித்துக் கொண்டார். ஆகவேதான் திப்பு சுல்தானுக்கு ஆங்கிலேய அரசு லண்டனில் இருக்கக்கூடிய அருங்காட்சியகத்தில் முக்கிய இடத்தை வழங்கினார்கள்.
ஆனால் மைசூர் சாம்ராஜ்யத்தில் இருந்த பல பேர் பெரும் மூச்சு விட்டார்கள். ஆமாம் திப்பு சுல்தானின் மறைவுக்குப் பிறகு நடந்த காரியங்கள் கண்ணீர் வர வைப்பதாக இருந்தது.
இப்போது திப்பு சுல்தானின் எதிரிகளுக்கு மிகப்பெரிய பலம் வந்திருந்தது. விளையாட்டுப் பிள்ளைகளின் கைகளில் கிடைத்த சிறு பந்தை போல திப்புசுல்தானின் குடும்பத்தார்களும், மெய்காப்பாளர்களும், அமைச்சர்களும் மாட்டிக்கொண்டார்கள்.
ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் பல இடங்களில் தங்கள் கோட்டைகளை வைத்திருந்தார்கள். அங்கெல்லாம் அமைச்சர்களும், கோட்டையை நிர்வாகம் செய்தவர்களும், படைத் தளபதிகளும், மருத்துவர்கள், ஆசிரியர்கள் என்று தங்கள் குடும்பத்தார்களோடு வசித்தார்கள். இவர்கள் அனைவரும் கோட்டைகளை விட்டு விரட்டியடிக்கப்பட்டார்கள்.
திப்பு சுல்தானுடைய நேரடி வாரிசுகள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்கள். கல்கத்தா போன்ற தூர தேசங்களில் கொண்டு போய் விடப்பட்டார்கள். இவர்களின் ஆறு ஏழாவது தலைமுறை இன்றைக்கும் எங்கோ ஒரு இடத்தில் கூலித்தொழிலாளியாகவோ ஆட்டோ ஓட்டுபவராகவோ இருக்கிறார்கள்.
மைசூர் சாம்ராஜ்யத்தை மீட்டெடுத்து கட்டி எழுப்பிய மக்கள் கோட்டைகளை விட்டு விரட்டி அடிக்கப்பட்டு நாடோடிகளாக திரிய ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்கள் சென்ற பகுதியில் எல்லாம் அங்கிருந்து படைகளோடு சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கொண்டே இருந்தார்கள்.
அதிலே சிலர் கோவா, மங்களூர், கேரளா என்று பிரிந்து சென்றார்கள். கோவா பகுதிகளில் தங்கிய அவர்கள் தங்களுக்குள் மட்டும் பெண் கொடுத்து எடுத்துக் கொண்டு திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்கள் இன்றும் அதை கடைபிடித்து வருகிறார்கள்.
கேரளாவிற்குச் சென்ற பல பேர் அங்கிருந்து ஓமானிற்குள் சென்று அரேபியர்களாக மாறி விட்டார்கள். ஓமானின் சலாலா பகுதிகளில் வசிப்பதாக கூறப்படுகிறது. பலர் இப்படி ஆங்காங்கே இருப்பிடங்களை அமைத்துக் கொண்டாலும் இன்னமும் பல பேர் நாடோடிகளாக நாடு முழுவதும் திரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
நன்றி : படம் (ஆசிரியரின் தேர்வு) இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்.