அத்தியாயம் – 38 : மக்கா முதல் மைசூர் வரை

திப்பு ரஹிம்

முடிவுரையாக…

நண்பர்களே உலக வரைபடம் எப்போதும் ஒரே மாதிரி நிலைத்து நிற்பதில்லை. அதிகபட்சம் 100 அல்லது 200 ஆண்டுகளில் மாற்றி மாற்றி அமைக்கப்பட்டு வந்து கொண்டே இருக்கிறது. நம்மை சுற்றி இருக்கக்கூடிய சூழ்நிலைகள் எப்போதும் இது போலவே இருக்கும் என்று எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை.

இரண்டாம் உலக போருக்கு முன்பாக இருந்த பல நாடுகள் அதற்கு பிறகு இல்லாமல் போனது அதற்கு முன்பு வெளியே தெரியாமல் இருந்த பல நாடுகள் வல்லரசாக மாறிவிட்டது.

இந்த வரலாறுகளில் கூட எத்தனையோ அரசர்கள் வந்து போயிருந்தார்கள். சில அரசர்களுடைய காலங்களில் மக்கள் நிம்மதியாக, சில அரசர்களுடைய காலங்களில் மக்கள் நிம்மதி இழந்தும், வறுமையிலும் வாழ்ந்தார்கள்.

இன்றைக்கு உக்ரைன் ரஷ்யாவுக்கும் போர், இஸ்ரேல் பாலஸ்தீன் போர் என்று எங்கோ ஒரு மூலையில் சண்டைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த சண்டைகள் நிறைவு பெற்றாலும் இந்த பகுதிகள் மீண்டும் கட்டி எழுப்ப இரண்டு மூன்று தலைமுறைகள் ஆகும்.

அங்கே இருக்கக்கூடிய மக்கள் ஒரு பகுதியில் இருந்து வேறு பகுதிகளை நோக்கிச் செல்வதும், நாட்டை விட்டே கைக்குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியேறுவதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஒரு நாட்டிலே போர் வந்துவிட்டால் அந்த நாட்டிலே இருக்கக்கூடிய மக்களுக்கு பணம் தேவை இருக்காது, அது செல்லாமல் ஆகிவிடும். அங்கு உணவும் இருப்பிடவும் தான் தேவையாக இருக்கும்.

நமது இந்திய தேசத்தில் கூட வட இந்திய மக்கள் மிகவும் வறுமையிலும், சரியான தலைவர்கள் அமையாததினாலும் கல்வி கிடைக்காமல், போதிய வருமானம் இல்லாமலும், தீண்டாமையினாலும், வறுமையின் காரணமாக நாடு முழுவதும், பல பகுதிகளுக்கு கூலி வேலைகளுக்குச் சென்று அன்றாடம் தங்கள் பசியை போக்கிக் கொள்ளும் நிலையில் தான் இருக்கிறார்கள்.

அப்படி பட்ட இந்த காலத்தில் இந்த சூழலில் நாம் நிம்மதியாக வாழ்கிறோம். அது தொடர்ந்து எத்தனை காலங்கள் இருக்கும்? என்பது வரும் தலைவர்களை பொறுத்து தான் அமைகிறது. உலகத்தின் பல பகுதிகளிலும் பசி, பஞ்சம், பட்டினி என்று இருந்தாலும் நமக்கு அந்த சூழல்கள் வராத வரை சந்தோசமாக வாழ வேண்டும்.

மெக்கா முதல் மைசூர் வரை நிறைவு பெற்றது.

****

ஒரு வரலாற்றுத் தொடரை மிகச் சிறப்பாக எழுதி வந்த எழுத்தாளர் திப்பு ரஹீம் அவர்களுக்கு கேலக்ஸியின் நன்றியும் வாழ்த்துக்களும்.

தொடர்ந்து பயணிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *