அத்தியாயம் – 29
கல்பனா சன்னாசி
அத்தியாயம் - 1 அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 28
அந்தக் கல்யாண மண்டபத்தில் மணமக்கள் மேடை மற்றும் கச்சேரி மேடை என இரண்டும் பரபரப்பாக இருந்தது.
ஒரு பக்கம் இசைக் கருவிகளும் அவற்றை வாசிப்பவர்களும் தங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தனர்.
முதலில் கச்சேரி, பிறகு கல்யாணம் என்பதே அன்றைய நிகழ்ச்சிகளின் நிரல்.
ஒரு பக்கம் மணமக்கள் மேடை மலர் அலங்காரங்களுடன் அழகை வாரி அள்ளிப் பூசிக் கொண்டிருந்தது.
இந்தப் பக்கம் சரண் மைக்கை கையில் எடுத்தான். நிமிர்ந்தவன் கண்களில் விழுந்தார்கள் கூடியிருந்த மக்கள்.
முதல் வரிசையில் தீப்தி – செல்வா. உண்மையிலேயே கல்யாணக் களை கட்டியிருந்தது செல்வாவின் முகத்தில். தீப்தி பக்கம் சாய்ந்து அவள் செவிகளில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.
தீப்தி அதை ஆமோதிப்பது போல் தலையசைத்துக் கொண்டிருந்தாள். ஆடையும் அலங்காரமும் பளபளக்க அவளும் கூட தகதகவென்று ஜொலித்துக் கொண்டிருந்தாள்.
கல்யாணப் பெண்ணை விட அவளின் தோழியர்தான் மிக உற்சாகமாக இருப்பார்கள் போல. தானும் கூட எக்கச்சக்க நகைகளுடனும் எக்கச்சக்க மேக்கப்புடனும் ஜான்சி, தீப்தியின் அருகே.
டிரம் அதிர்ந்தது. சரணின் நெஞ்சத்தைப் போலவே.
“என்னடி மீனாட்சி?” – சரணின் குரல் அந்த ஆடிட்டோரியத்தைக் கேள்வி கேட்டது.
தொடர்ந்த அவன் பாடல்களில் அவன் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்த உணர்ச்சிகள் பொங்கி வழிந்தன.
“நெஞ்சம் துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன் தோழி”
அவன் பாடப் பாட, வார்த்தைகளின் பாவத்தில் வருத்தத்தின் வாசனை.
“உந்தன் உதட்டில் மறைந்திருக்கும் பழரசம்
அந்த வனப்பில் மறைந்திருக்கும் துளி விஷம்”
குமுறிய குரலில் ஆவேசம்.
“என்ன மறந்து போவதும் ஞாயமோ
இந்தப் பிரிவைத் தாங்குமோ என் மனம்”
சோகத்தில் நெகிழ்ந்தது சரணின் பாடல்.
“வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா, மார்பு துடிக்குதடி!”
சரண் பாடலை முடிக்கையில் அரங்கம் அதிர்ந்தது.
அதிகம் கை தட்டியவன் செல்வாதான்.
அவனின் ஆனந்தத்திற்கு சொல்லவா வேண்டும்? சிரிப்பும் செழிப்புமாக துள்ளிக் கொண்டிருந்தான்.
தாங்கிட முடியவில்லை சரணால்.
தீப்தியையும் செல்வாவையும் அருகருகே பார்க்க முடியாமல் திரும்பிக் கொண்டான்.
இருண்ட முகத்தோடு அவன் கச்சேரி மேடையை விட்டு இறங்கினான்.
உற்சாக மகிழ்ச்சியோடு கல்யாண மேடையில் ஏறினான் செல்வா. அவனைத் தொடர்ந்தாள் தீப்தி.
மணமக்கள் அருகருகே அமர, மந்திரத்தை தொடங்கினார் புரோகிதர்.
அவர்களுக்கு எதிரே நின்று கொண்டிருந்தான் சரண்.
உள்ளத்தை வெறுமை சூழ்ந்திருந்தது. உலகம் முழுவதும் மறைந்து விழிகளின் முன்னே தீப்தி – செல்வா மாத்திரம்.
“மாங்கல்யம் தந்துனானேனா…”
புரோகிதர் தாலியிருந்த தாம்பாளத்தை செல்வா முன் நீட்டினார்.
சரண் துடித்தான்.
தாலியைக் கைகளில் எடுத்தான் செல்வா.
உள்ளுக்குள் வெடித்து சிதறினான் சரண்,
செல்வாவின் கைகள் தாலியுடன் தீப்தியின் சங்கு கழுத்தை நெருங்க –
சரேலெனத் திரும்பி சரண் அங்கிருந்து அகல முற்பட –
“எந்திரி தீப்தி. போதும். என்னால முடியல”, ஜான்சியின் ஒலி மிகுந்த குரல் அவனை நிறுத்தியது.
திரும்பிய சரண் மறுபடியும் திரும்பினான். எதிர்ப்பக்கம். மேடையை நோக்கி.
“எந்திரி தீப்தி. முதல்ல நீ எந்திரி” தீப்தியைப் போட்டு உலுக்கிக் கொண்டிருந்தாள் ஜான்சி.
என்ன நடக்கிறது இங்கே?
சரண் திகைக்க, மேடையில் அவன் எதிர்பாராதது ஏதேதோ நடந்து கொண்டிருந்தன.
தன்னை உலுக்கிய ஜான்சியிடம் தீப்தி ஏதோ சொல்ல முயல, இப்போது செல்வாவும் ஜான்சியோடு சேர்ந்துகொண்டான்.
“எல்லாம் அப்புறம் பேசிக்கலாம். முதல்ல நீ எந்திரி தீப்தி. நல்ல நேரம் முடியறதுக்குள்ள எங்க கல்யாணம் நடக்கட்டும்.” செல்வா புலம்ப –
‘எங்கக் கல்யாணமா? அது யாரு அந்த ”எங்கள்??’

சரண் புரியாமல் குழம்ப –
விருட்டென எழுந்தாள் தீப்தி. கழுத்திலிருந்த மாலையைக் கழட்டியவள் அதைக் கடாசப் போக, ஜான்சி குறுக்கே புகுந்து பறித்து மாலையைத் தன் கழுத்தில் மாட்டிக்கொண்டாள்.
தீப்தியின் கண்காளில் கோபம். கூடவே கொஞ்சம் கண்ணீர். விறுவிறுவென சரணிடம் வந்தாள்.
“பாத்தியா? பாத்தியாடா? இதுதான் காதல்” செல்வா – ஜான்சி ஜோடியை கை காட்டினாள்.
“தீப்தி… நான்..” சரண் திணற,
“பேசாதே. ஒரு வார்த்தை பேசினே, கொன்னுடுவேன் உன்னை..”
தீப்தியின் வார்த்தையில் சினம். கண்களிலோ கண்ணீர்.
“முட்டாளாடா நீ?” அதிர்ந்தது அவள் கேள்வி.
“ஒரு ரெண்டு நிமிஷம் அவன் பக்கத்துல பொய்யா நடிச்சதுக்கே என்னை விரட்றான் செல்வா. ஆனா நீ?” தீப்தியிடம் ஆவேசம். “என்னை எவனாவது கல்யாணம் பண்ணிக்கட்டும்னு கையைக் கட்டிக்கிட்டு வேடிக்கைப் பாக்கிறே? அப்டி என்னை விட்ருவியா நீ? சொல்லு. நீ என்னை அப்டி விட்ருவியா? சொல்லுடா?”
சரணின் காலரைப் பிடித்து உலக்கினாள்.
சரண் திகைப்பின் பிடியிலிருந்து இன்னும் விடுபடவில்லை. நடப்பவை அவனுக்கு எதுவும் புரியவில்லை.
“நீ என்னை லவ்வே பண்ணலைடா”, தீப்தியின் உணர்ச்சி கோபத்திலிருந்து ஒரு மெல்லிய சோகத்துக்கு நிறம் மாறியது.
“உண்மையா என்னைக் காதலிச்சிருந்தா என்னை உதறிருப்பியா? பாரு. அங்கப் பாரு. செல்வா – ஜான்சி. அவுங்கதான் உண்மையான லவ்வர்ஸ். ஒருத்தரை ஒருத்தர் இன்னொருத்தருக்கு விட்டுக்கொடுக்காம…”
உண்மையிலேயெ இங்கே சரணும் தீப்தியும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்க மேடையில் செல்வா ஜான்சியின் கழுத்தில் தாலியைக் கட்டிக்கொண்டிருந்தான்.
“நீ என்னை லவ்வே பண்ணலைடா. நான்தான் உன்னை நம்பி எமாந்துட்டேன். போடா.”
அவனை விட்டு, அந்த இடத்தை விட்டு மெதுவாக வெளியேறினாள் தீப்தி.
அதற்குள் அதைப் பார்த்துவிட்டு அரக்கப் பரக்க மேடையை விட்டு ஓடி வந்தான் செல்வா. பின்னாலேயே ஜான்ஸி.
“சிங்கர் சார். எல்லாம் உங்களை உசுப்பேத்த தீப்தி போட்ட டிராமா. இன்னும் புரியலையா உங்களுக்கு? நானும் தீப்தியும் எப்பவுமே காதலிக்கலை. ஜான்சி என்னோட சின்ன வயசுத் தோழி. மை ஒன்லி காதலி. இப்ப என் மனைவி.”
“அடக் கடவுளே! தீப்தி…” குரல் நெகிழ, அவளை ஒரு கதறலோடு அழைத்தபடியே விரைந்தான் சரண்.
அவள் ஆடிட்டோரியத்தை விட்டு வெளியேறியிருந்தாள்.
மழை சன்னமாகத் தூறிக் கொண்டிருந்தது.
ஆளற்ற அந்தப் பிரதேசத்தை அங்கும் இங்குமாக அலசித் தேடிய சரணின் விழிகளில் பட்டாள் தீப்தி. அவளின் காருக்கு அருகே.
ஓடினான் சரண். காருக்குள் ஏறப் போனவளின் தோளைப் பிடித்து நிறுத்தினான்.
“தீப்தி… ஐயாம் ஸாரி. ஐயாம் ரியலி ஸாரி” அவளோ அவனை விலக்கினாள். விலகினாள்.
“இட்ஸ் ஓவர் மிஸ்டர் சரண்.” அவனை புறக்கணித்தாள். காரில் ஏறினாள்.
“தீப்தி… தீப்தி” கெஞ்சியவன் முகம் மறைத்துக் கார் கண்ணாடியை மூடினாள்.
கால்கள் ஆக்ஸிலேட்டரை அழுத்தின. கார் பறந்தது.
பெரிதாக கொட்டத் தொடங்கிவிட்டிருந்த மழையில் நனைந்தபடி நின்று கொண்டிருந்தான் சரண். தன்னுடையக் காதலைத் தொலைத்துவிட்டு – தனியனாக!
திங்கள்கிழமை தொடரும்
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
Add comment
You must be logged in to post a comment.