அத்தியாயம் – 30
கல்பனா சன்னாசி
அத்தியாயம் - 1 அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 28
அத்தியாயம் - 29
கச்சேரியில் டிரம் வாசித்த இளைஞன் குடையைப் பிடித்துக்கொண்டு ஆடிட்டோரியத்திலிருந்து சரணை நோக்கி வந்தான்.
“ஹாய் சரண். செல்வா உங்களை ஏர்போர்ட்டில் டிராப் பண்ண சொன்னான்.”
“செல்வா?”
“ஜான்சியோடு தேங்காய் உருட்டிக்கிட்டு இருக்கான்.” புன்னகைத்தான் அந்த இளைஞன்.
அவனின் காரில் பயணித்து வீடு வந்து சேர்ந்ததோ லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு ஏர்போர்ட் வந்து சேர்ந்ததோ எல்லாமே இயந்திரத் தனமாக நடந்தது சரணுக்கு.
கல்யாணமும் கச்சேரியும் முடிந்தபிறகு சரண் இந்தியா திரும்ப விமான டிக்கெட் ஏற்கனவே புக் செய்யப்பட்டிருந்ததை சரண் அறிவான்.
செல்வா வேண்டாம் என்று சொல்லியும் அதற்கான தொகையையும் சரண் ஏற்கனவே செல்வாவுக்கு திரும்பக் கொடுத்துவிட்டான்.
கச்சேரிக்காவது ஏதாவது பணம் வாங்கிக்க சொல்லி செல்வா சரணைக் கேட்டபோது கூட அதை இந்தியாவில் உள்ள சில அனாதை இல்லங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் நன்கொடையாக கொடுக்க சொல்லிவிட்டான்.
இப்படி உடனடியாக விமானம் ஏற வேண்டி வருமென்பது சரணுக்கு முன்னமே தெரியும்.
ஆனால் அவனுக்கான தீப்தியின் காதல் இப்படி மாறாமல் அழியாமல் நிலைத்துக் கிடக்கும் என்பது அவன் கொஞ்சமும் ஊகித்திராத ஒன்று.
விமான நிலையத்தில் சரணை விட்டுவிட்டு அவனின் நற்பயணத்துக்கு வாழ்த்தும் சொல்லிவிட்டுப் பறந்தான் டிரம்மர் இளைஞன்.
நிலையத்தில் உள்ளே நுழைந்த சரண் அங்கே இருந்த நாற்காலியில் நிலைகுலைந்து சரிந்தான்.
நெஞ்சம் முழுக்க தீப்தி… தீப்தி… தீப்தி…
“முட்டாளாடா நீ?” கண்களில் நீர் தளும்ப அவள் கேட்டக் கேள்வியின் ஞாபகம் அவனைத் தாக்கி தவிடு பொடியாக்கியது.
“உண்மையில் நான் முட்டாள்தான் அதுவும் குருட்டு முட்டாள்.”
தலையைக் கைகளில் பிடித்துக்கொண்டான்.
உடைகளும் நகைகளும் வாங்குகையில் தெறிந்த ஜான்சியின் உற்சாகத்துக்கு காரணம் இப்போது புரிந்தது.
“ஐயாம் எங்கேஜ்டு” என்று அவள் இவனிடம் அறிவித்ததன் முழுப் பொருளையும் சரணால் இப்போது புரிந்துகொள்ள முடிந்தது.
ஆனாலும் என்ன செய்வது? எல்லாமே தாமதமாகிவிட்டது.
பொங்கிப் பெருகி அலைமோதிய எண்ணங்களால் திணறித் தவித்தான் சரண்.
இந்தியா பயணிக்க இருக்கும் அவனது விமான எண்கள் எல் ஈ டி விளக்குகளில் பளிச்சிட்டது.
கிளம்பும் நேரம் வந்துவிட்டது. சரணுக்கும். விமானத்துக்கும்.

பயணிகளின் செக் இன் வரிசையில் நின்ற சரணின் இதயம் சோகத்தோடு துடித்தது,
தீப்தியின் கண்ணீர் முகம் கண் முன்னே வந்து வலி தந்தது,
விமானத்துக்கென நுழைவாயில் நெருங்கியதும் நின்றுவிட்டான் சரண்.
திடுமென விழித்துக்கொண்டவன் போல்.
வந்த வழியே திரும்பி நடந்தான். நொடியில் நடை ஓட்டமானது.
தடதடவென்று விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தான். பரபரப்புடன் செல்வாவுக்கு போன் செய்தான்.
ரிங் போனதே தவிர எடுக்கப்படவில்லை.
மறுபடி மறுபடி அழைக்க ஒருவழியாக செல்வாவின் போன் எடுக்கப்பட்டது.
ஆனால் பேசியவளோ ஜான்சி.
“சரண்?”
“செல்வா எங்கே?”
“செல்வா… இங்கேதான்… அதைவிடு… நீ இன்னேரம் பிளேனில் இருக்கணும். இல்லாமல் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறாய். ஏன்?”
“நான் இந்தியா போகப் போவதில்லை ஜான்சி.”
“வ்வாட்??”
“போனை செல்வாவிடம் கொடு. நான் வீட்டுக்குத் திரும்ப வருகிறேன்.”
“உண்மையில் நீ முட்டாள் சரண். தீப்தி சொன்னது போல்.”
“என்ன சொல்றே நீ?”
“உன்னோடு பயணிக்க ஆல்ரெடி தீப்தி வெயிட்டிங். விமானத்தில்.”
“வ்வாட்??”
“ஓடு சரண். ஓடு. கோ. கேட்ச் ஹர். பிஃபோர் இட்ஸ் லேட்.”
“அடக் கடவுளே… கடவுளே…!”
“கோ. கோ. ரன்.”
சரண் ஓடவில்லை. பறந்தான். ஆனால் நிலைமையோ மேலும் சிக்கலானது.
செக்யூரிட்டி அவனை உள்ளே விடவில்லை.
விமானக் கதவு மூடப்பட்டுவிட்டது என்றுவிட்டார்கள்.
காலில் விழாத குறையாக கெஞ்சிக் கூத்தாடி அழாத குறையாக முரண்டு பிடித்து, மூடிய விமானக் கதவை திறக்கவைத்து அதன் உள்ளே சென்று விழுந்தான் சரண்.
மசமசத்த அவன் கண்களில் தீப்தி தெரிந்தாள். அதீத கோபத்தோடு.
மெதுவாக அருகில் சென்று அமர்ந்தான்.
அவ்வளவுதான்!
இவன் மேல் சரமாரியாக அடிகள் விழுந்தன. தீப்தியின் கைகள் கட்டுப்பாட்டை இழந்திருந்தன.
தோளிலும் மார்பிலும் மாறி மாறி விழுந்த அடிகளைத் தவிர்க்கவில்லை சரண்.
“அடி. நல்லா அடி.” என்றான் “எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.”
“முட்டாள்… முட்டாள்… இடியட்”, அடிகளை நிறுத்திவிட்டு வார்த்தைகள் தாக்குதல் தொடங்கினாள் தீப்தி.
“ஆனா ஏன் தீப்தி இந்த டிராமா?”
“நீ கல்யாணம் இப்ப வேண்டாம்னு தள்ளிப்போட்டா? வெற்றி வெற்றின்னு புலம்புனா? நான் என்னப் பண்ணட்டும்?”
“ஆனா வெற்றிக்காக காதல் கொஞ்சம் காத்திருந்தாதான் என்ன?”
“எதுவரைக்கும் காத்திருக்கிறது? அந்தக் காதலே கை நழுவிப் போற வரைக்குமா?” தீப்தியின் கேள்விக்கு சரணிடம் மௌனமே பதிலாக அமைந்தது.
“வாழ்க்கையில் சாதனை முக்கியம் சரண். ஆனால் காதல்தான் வாழ்க்கையே.”
கோபம் குறைந்திருந்த தீப்தியின் குரலில் கடலளவு நேசம் நிறைந்து ததும்பியது.
“சாதனை வாழ்க்கையோட ஒவ்வொரு கட்டத்துலயும் ஒவ்வொரு மாதிரி சரண். ஓட்டப் பந்தயத்துல ஜெயிக்கிறதுன்னு ஒரு கட்டம். கணக்குல நூறுங்கிறது ஒரு சமயம். அது மாதிரி வெற்றியோட விளக்கம் மாறிக்கிட்டே இருக்கும். ஆனால் அன்பும் அது தரும் காதலும் மாறாது. மாறவும் கூடாது சரண்.” – தீப்தி பேசிக்கொண்டே போனாள்.
“அன்பும் சாதனையும் கை கோர்த்துக்கிட்டுப் பயணிக்கிறதுலதான் வாழ்க்கையோட சுவாரஸ்யமே இருக்கு”, அவள் சொல்ல சொல்ல சரண் நெகிழ்ந்தான்.
“அன்புதான் வாழ்க்கை. சின்ன வயசுல அது பாசம். இளமைக் காலத்துல அது காதல். கொஞ்சம் வயசானதும் மரியாதை. இப்டி அன்புதான் மொத்த வாழ்க்கையும். இப்பவாவது உனக்குப் புரிஞ்சா சரி.” – தீப்தியின் வார்த்தைகளில் காதல் பெருமழையெனப் பொழிந்தது.
நனைந்து சிலிர்த்தான் சரண்.
தீப்தியின் கைகளைத் தன் கைகளில் எடுத்துக்கொண்டான்.
மென்மையாக முத்தமிட்டான். தீப்தி தன் முகத்தை அவன் தோளுக்கு கொடுத்தாள்.
விமானம் ஆகாயத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது.
வெள்ளிக்கிழமை தொடரும்
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
Add comment
You must be logged in to post a comment.